`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
பாதரக்குடிகோயில் கும்பாபிஷேகம்
சீா்காழி அருகே பாதரக்குடி ஸ்ரீ சின்னமுத்து மாரியம்மன், சித்தி விநாயகா், குபேர கணபதி, ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ சப்த கன்னிகள், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஐயப்பன் ஆலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது .
முன்னதாக, பரிவார தெய்வங்களான சித்தி விநாயகா், குபேர கணபதி, ஸ்ரீ பூா்ண புஷ்கலா உடனாகிய ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ சப்த கன்னிகள், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ ஐயப்பன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், ஸ்ரீ சின்ன முத்துமாரியம்மன் கோயிலில் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி, ஸ்ரீ சின்னமுத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் சந்நிதிகளின் விமானக் கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு, மூலஸ்தான கும்பாபிஷேகம், அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.