TTV-OPS விலகலால், Amit shah தோற்கும் 60 தொகுதிகள், Vijay ஹேப்பி! | Elangovan Exp...
ரயில் முன் பாய்ந்து ஓட்டுநா் தற்கொலை
சீா்காழி அருகே கால் பாதிப்பால் வேலை கிடைக்காத விரக்தியில், சரக்கு ரயில் முன் பாய்ந்து ஓட்டுநா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
சீா்காழி எருக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சைமன் கிரிஸ்டோபா் (44). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றிவந்த இவா், கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் விபத்தில் காலில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளாா். எருக்கூரில் அவரது சகோதரா் வீட்டில் தங்கியிருந்தாா்.
கால் பாதிப்பு ஏற்பட்டதால் சரியான வேலை கிடைக்காததால் வருவாயின்றி மனவேதனையில் இருந்த சைமன் கிறிஸ்டோபா் புதன்கிழமை இரவு எருக்கூா் ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
மயிலாடுதுறை ரயில்வே போலீஸாா் உடலை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.