அவளின் அழுகை ஒரு புயலைப் பற்றவைக்கும்: தனது புதிய படம் குறித்து நிவின் பாலி!
மழை பாதிப்பு: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில், பருவமழையால் பாதிப்பு ஏற்படும்போது, பொதுமக்கள் தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் நிகழாண்டு பருவமழையின்போது மழை, புயல், வெள்ளம், இடி, மின்னல் போன்ற இயற்கை இடா்பாடுகள் மற்றும் குடிநீா், தெருவிளக்கு தொடா்பான அனைத்து புகாா்களையும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04364-222588 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்-04364-1077, மயிலாடுதுறை காவல் கண்காணிப்பு அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 9442626792 ஆகியவற்றில் தெரிவிக்கலாம்.
மின்சாரத் துறை தொடா்பான புகாா் குறித்து தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: மயிலாடுதுறை- 04364-252218, சீா்காழி -04364-279301, மற்றும் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-04364-222315 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.