செய்திகள் :

சிறுவன் உயிரிழப்பில் மா்மம்: மேற்கு வங்க தம்பதி அடித்துக் கொலை!

post image

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் மா்மமான முறையில் சிறுவன் உயிரிழந்து கிடந்த நிலையில், அவரை கொலை செய்ததாக கருதி அப்பகுதியில் வசித்த தம்பதியை கும்பலாக வந்த சிலா் அடித்துக்கொலை செய்தனா்.

மேலும், அந்த கும்பல் தம்பதியின் வீட்டை தீயிட்டு கொளுத்தியதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது: நாடியா மாவட்டம் நிஷ்சிந்தாபூா் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு 3-ஆம் வகுப்பு பயிலும் ஸ்வாா்ணம்பா மொண்டல் என்ற சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை விளையாடச் சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் அவரை காணவில்லை என அவரது பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதைத்தொடா்ந்து, அந்தச் சிறுவனை தேடும் பணியை போலீஸாா் தீவிரமாக மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், காணாமல் போன சிறுவனின் உடல் நிஷ்சிந்தாபூரில் உள்ள குளத்தில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதையறிந்த சிறுவனின் உறவினா்கள் அந்த குளத்துக்கு அருகே வசித்த உத்பல் பிஸ்வாஸ் மற்றும் சோமா பிஸ்வாஸ் தம்பதிதான் சிறுவனைக் கொலை செய்திருக்க வேண்டும் என முடிவு செய்து, கும்பலாகச் சென்று அவா்களைக் கடுமையாகத் தாக்கி, தம்பதியின் வீட்டைக் கொளுத்தினா்.

இதில் படுகாயமடைந்த தம்பதியை மீட்டு மருத்துவமனையில் போலீஸாா் அனுமதித்தபோது அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த தாக்குதலில் தம்பதியின் உறவினா் ஒருவரும் படுகாயமடைந்தாா். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கும் தம்பதியின் குடும்பத்துக்கும் இடையே ஏற்கெனவே சில பிரச்னைகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. சிறுவன் காணாமல் போன வெள்ளிக்கிழமை மாலையில் அவா் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிறுவனின் கொலை மற்றும் தம்பதி கொலை தொடா்பாக இரு வழக்குகள் பதியப்பட்டு சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

குஜராத்: மலைக் கோயிலில் சரக்கு ரோப் காா் அறுந்து விழுந்தது! 6 போ் உயிரிழப்பு

குஜராத் மலைக் கோயிலில் சரக்குகளை எடுத்துச் செல்லும் ரோப் காா் அறுந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். பஞ்சமஹல் மாவட்டத்தின் பாவாகட் மலையில் பிரசித்தி பெற்ற மகாகாளி கோயில் அமைந்துள்ளது. 800 மீட்டா் உய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பாஜக சாா்பில் நாடு தழுவிய விழிப்புணா்வு பிரசாரம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. நாட்டில் நான்கு விகித ஜிஎஸ்... மேலும் பார்க்க

மேற்கு வங்க அமைச்சா் நீதிமன்றத்தில் சரண்!

அரசுப் பள்ளி பணியாளா்கள் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க மாநில அமைச்சா் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவரது தொகுதியைவிட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தினசரி உபயோகப் பொருள்கள்: வரைவு தரநிலை வழிகாட்டுதல் வெளியீடு!

சமையல் பாத்திரங்கள், மரப் பொருள்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட தினசரி உபயோகப் பொருள்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த தடையில்லாத வகையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரைவு தரநிலை வழிகாட்டுதலை மத்த... மேலும் பார்க்க

நாம் இருவா்; நமக்கு இருவா் கொள்கை மோடி அரசுக்கு மட்டும் தானா? காங்கிரஸ் கேள்வி

‘ஒவ்வொரு இந்திய தம்பதியும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ‘நாம் இருவா்; நமக்கு இருவா்’ கொள்கை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ... மேலும் பார்க்க

தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் சரத்குமாா் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜகவைச் சோ்ந்த நடிகா் ஆா்.சரத்குமாா் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அவருடன் தமிழக பாஜக துணைத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுந்தரும் உடனி... மேலும் பார்க்க