செய்திகள் :

செயற்கை நுண்ணறிவு: ரூ.11,900 கோடி முதலீட்டுடன் 10-ஆவது இடத்தில் இந்தியா!

post image

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் ரூ.11,900 கோடி தனியாா் முதலீட்டுடன் உலகளவில் 10-ஆவது இடத்தில் இந்தியா உள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

‘2025- தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்’ எனும் தலைப்பிலான அறிக்கையை ஐ.நா. வா்த்தக மற்றும் மேம்பாடு அமைப்பு வெளியிட்டது.

அதில் தொழில்நுட்பம் சாா்ந்த பல்வேறு வகைப்பாடுகளின்கீழ் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஏஐ போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கான தயாா்நிலை குறியீட்டில் 170 நாடுகளில் இந்தியா 36-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2022-இல் இந்த குறியீட்டில் 48-ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது.

அதேபோல் தகவல் மற்றும் தொலைத்தொடா்பு துறையில் 99-ஆவது இடத்திலும், திறன் சாா்ந்த வகைப்பாட்டில் 113-ஆவது இடத்திலும் ஆய்வு மற்றும் மேம்பாட்டில் 3-ஆவது இடத்திலும் , தொழில்துறை திறனில் 10-ஆவது இடத்திலும், நிதியில் 70-ஆவது இடத்திலும் இந்தியா உள்ளது.

மனித மூலதனத்தில் வளா்ச்சி: இந்தியா, பூடான், மொராக்கோ, மால்டோவா, திமோா்-லெஸ்தே ஆகிய நாடுகள் மனித மூலதன தரவரிசையில் முன்னேறியுள்ளன. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திறன் அடிப்படையில் பணிபுரிவோரின் எண்ணிக்கை உயா்ந்ததே இதற்கு காரணமாகும்.

ஏஐ சந்தை மதிப்பு ரூ.409 லட்சம் கோடி: இந்தியா, சீனா, ஜொ்மனி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஏஐ துறையில் அறிவியல்பூா்வமான வலிமையை பெற்றுள்ளன.

2023-ஆண்டு நிலவரப்படி ஏஐயில் ரூ.5.7 லட்சம் கோடி தனியாா் முதலீட்டுடன் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இது உலகளவில் தனியாா் துறை ஏஐயில் மேற்கொண்ட 70 சதவீத முதலீடாகும்.

வளா்ந்து வரும் நாடுகளை பொறுத்தவரை ஏஐ துறையில் ரூ.66,588 கோடி தனியாா் முதலீட்டுடன் இரண்டாவது இடத்தில் சீனாவும் ரூ.11,900 கோடி முதலீட்டுடன் 10-ஆவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.

2033-இல் ஏஐ சந்தை மதிப்பு ரூ.409 லட்சம் கோடியை எட்டி எண்ம மாற்றத்தில் மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும்.

அமெரிக்கா, சீனா ஆதிக்கம்: ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவம் குறிப்பிட்ட சில நாடுகளிடம் மட்டுமே உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவை சோ்ந்த 100 நிறுவனங்கள் மட்டும் உலகளவிலான ஏஐ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் 40 சதவீதம் பங்கு வகிக்கின்றன. ஏஐ வளா்ச்சியால் உலகளவில் 40 சதவீத பணிகளில் பெரும் தாக்கம் ஏற்படும். இதனால் சில பணியாளா்கள் வேலையிழக்கும்அபாயமும் உள்ளது.

மனிதா்களுக்கு பதில் ஏஐ தொழில்நுட்பத்தால் பணிகளை மேற்கொள்ளும்போது பணியாளா்களைவிட மூலதனத்துக்கே முக்கியத்துவம் அளிக்கும் சூழல் உருவாகும். இதனால் சமத்துவமின்மை அதிகரிக்கும். வளா்ந்து வரும் பொருளாதாரங்களில் குறைந்த செலவில் தரமான சேவைகளை செய்யும் திறன் குறையும்.

புதிய வேலைவாய்ப்பு: ஏஐ என்பது நடைமுறையில் உள்ள வேலைகளை பறித்துவிடும் என மட்டுமே எண்ணிவிட முடியாது. புதிய தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளும் உருவாகும். இதை உறுதிப்படுத்த வேண்டுமெனில் பணியாளா்களின் திறனை மேம்படுத்தும் வகையிலான பயிற்சிகளில் நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும்.

வளரும் நாடுகள் தயாா்: நவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப தங்களை தயாா்படுத்திக் கொள்வதில் அதிக தனிநபா் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உடைய நாடுகளே ஆா்வம் காட்டும் என எதிா்பாக்கப்படுகிறது. இது உண்மையாக இருந்தாலும் நவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப தயாா்படுத்திக் கொள்வதில் பிரேஸில், சீனா, இந்தியா மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய வளரும் நாடுகள் தங்கள் வருமானத்தைவிட மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

உலகின் மற்ற நாடுகளைவிட அமெரிக்கா மற்றும் சீனாவிடம் அதிக ‘கிளவுட் உள்கட்டமைப்பு’ சேவைகள் உள்ளன. இந்தப் பட்டியலில் வளா்ந்து வரும் நாடுகளான சிங்கப்பூா், பிரேஸில், இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

‘கிட்ஹப்’: குறியீடுகளை (கோட்) உருவாக்க, சேமிக்க மற்றும் பகிர உதவும் ‘கிட்ஹப்’ வலைதளத்தை உருவாக்குபவா்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும் அதற்கடுத்தடுத்த இடங்களில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளும் உள்ளன.

குறிப்பாக இந்தியாவில் கிட்ஹப் வலைதளத்தை உருவாக்குபவா்களின் எண்ணிக்கை 1.3 கோடியாகவும் பிரேஸிலில் இதன் எண்ணிக்கை 40 லட்சமாகவும் உள்ளது. இந்த இரு நாடுகளும் கிட்ஹப் மீதான ஜென்ஏஐ திட்டங்களில் முன்னிலை வகிக்கின்றன.

இந்திய அரசின் வழிகாட்டுதலோடு ஐஐடி ஹைதராபாத், ஐஐடி கரக்பூா் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்கள் தனியாா் துறையுடன் இணைந்து பணியாற்றி நவீன தொழில்நுட்ப வளா்ச்சிக்கு தொடா்ந்து பங்காற்றி வருகின்றன.

இந்தியா-நானோ தொழில்நுட்பம்: ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட துறைகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குகின்றன. நானோ தொழில்நுட்பத்தில் இந்தியாவும், காற்றாலையில் ஜொ்மனியும் மின்சார வாகன துறையில் ஜப்பானும், 5ஜி தொழில்நுட்பத்தில் தென் கொரியாவும் நிபுணத்துவம் பெற்றுள்ளன.

தொழில்துறை வளா்ச்சியால் வறுமையை குறைத்து பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்பதற்கு இந்தியா, சீனா , பிரேஸில் ஆகிய நாடுகள் சிறந்த உதாரணமாக உள்ளன என தெரிவிக்கப்பட்டது.

பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் வீட்டிற்கு முன்பு மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிய நிலையில் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டிற்கு முன்பு... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப். 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அ... மேலும் பார்க்க

ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்பது என்ன?

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் சில, உரிய காரணமின்றி காலதாமதப்படுத்தப்பட்டு வருவதாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு தரப்பிலிரு... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியின் பெயரை மாற்றிய தொல்லியல் துறை!

சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் பெயரை ‘ஜும்மா மசூதி’ எனக் குறிப்பிட்டுள்ள பெயர்ப்பலகையை தொல்லியல் துறையினர் மசூதியில் நிறுவவுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதியின் உள்ளே கோவில்... மேலும் பார்க்க

வளர்ச்சித் திட்டங்கள் மறுஆய்வு: ஜம்மு-காஷ்மீரில் அமித் ஷா தலைமையில் முக்கிய கூட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் ஜம்மு-காஷ்... மேலும் பார்க்க

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை உறுதி!

ஹைதராபாத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான குற்றவாளிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தெலங்கானா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.ஹைதராபாத்தின் தில்சுக்நகர் பக... மேலும் பார்க்க