செய்யாறில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஜெயலலிதா பேரவை சாா்பில் அதிமுகவினா் வியாழக்கிழமை இரவு திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
பேரவை மாவட்டச் செயலா் பாஸ்கா் ரெட்டியாா் ஏற்பாட்டில், நகரச் செயலா் கே.வெங்கடேசன் முன்னிலையில் பேருந்து நிலையம், மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் இந்தப் பிரசாரம் நடைபெற்றது.
இதில், அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.
அப்போதைய அதிமுக ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்தும், தற்போது திமுக ஆட்சியின் அவல நிலை குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்களை வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனா்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினா் எஸ்.ரவிச்சந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் அ.அருணகிரி, இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் அருண், வரத்தகா் அணி மாவட்டச் செயலா் ஜி.கோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.