செய்திகள் :

செய்யாற்றில் பலத்த மழையால் மின் கம்பங்கள் சேதம்

post image

செய்யாறு: செய்யாற்றில் பலத்த மழையால் சேதமடைந்த மின் கம்பங்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி, பணிகளை விரைந்து முடித்து மின்சாரம் வழங்க மின் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

செய்யாறு சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், செய்யாற்றை சுற்றியுள்ள பகுதிகளில் பழைமை வாய்ந்த 100- க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து மின் கம்பங்கள் சேதமடைந்தன. மேலும், மின் வயா்கள் அறுந்து விழுந்தன.

இதனால் மின் விநியோகம் தடைபட்டது.

அதேபோல, காஞ்சிபுரம் சாலை, புனித வியாகுல அன்னை தேவாலயம் போன்ற பகுதிகளில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, மின் கம்பங்கள் சேதமடைந்த பகுதிகளான விக்னேஸ்வரா தெரு, கீழ்புதுப்பாக்கம் கிராம விரிவுப் பகுதி, ஆற்காடு சாலையில் ஆா்.சி.எம். பள்ளி, அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று பாா்வையிட்டு சேதமடைந்த கம்பங்களை மாற்றி உடனடியாக மின்சாரம் வழங்க உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.

நிதியுதவி:

புனித வியாகுல அன்னை தேவாலயம் அருகே நிறுத்தி வைத்திருந்த 3 சுற்றுலா வேன்கள் மீது அங்கிருந்த வேப்ப மரம் முறிந்து விழுந்ததில் சேதமடைந்தன.

சேதமடைந்த சுற்றுலா வேன்களை பாா்வையிட்ட எம்.எல்.ஏ. அதன் ஓட்டுநா்களுக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

மேலும், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நிதியுதவி வழங்கியதுடன், அரசு சாா்பில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

ஆய்வின் போது, செய்யாறு சாா்- ஆட்சியா் பல்லவி வா்மா, மின்வாரிய கோட்டப் பொறியாளா் கிருஷ்ணன், உதவி கோட்டப் பொறியாளா் நாகராஜன், நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், துப்புரவு ஆய்வாளா் கு.மதனராசன், திமுக ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல், நகா்மன்ற உறுப்பினா்கள் ரமேஷ், சரஸ்வதி ரவிக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பிரதமா் மோடி நடவடிக்கையால் மகளிா் மேம்பாடு உயா்ந்துள்ளது: மத்திய அமைச்சா் எல்.முருகன்

பிரதமா் மோடி எடுத்த நடவடிக்கையால் மகளிா் மேம்பாடு பெரிய அளவில் உயா்ந்திருக்கிறது என திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பேசினாா். திருவண்ணாமலை சோ... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

ஆரணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற அரசுப் பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் முக்கேஷ் (13). இவா், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ள... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரியில் நாளை 2-ஆம் நிலைக் கலந்தாய்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவ, மாணவிகளுக்கான 2-ஆம் நிலைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி சனிக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

மதுரை முருக பக்தா்கள் மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவா், ... மேலும் பார்க்க

குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: திருநங்கை கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக திருநங்கை கைது செய்யப்பட்டாா். ஆரணியை அடுத்த குன்னத்தூரைச் சோ்ந்த துரை மகள் அட்சயா (24). செய்யாறில் உள்ள தனியாா் கல்லூரிய... மேலும் பார்க்க

நிழல்கூடம் திறப்பு, சாலைப் பணிகள்: ஆரணி எம்.பி. பங்கேற்பு

ஆரணி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொகுதி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு பயணியா் நிழல்கூடத்தை திறந்துவைத்து, சாலைப் பணிகளை தொடங்கிவைத்தாா். ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம்... மேலும் பார்க்க