Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
செல்லியம்பாளையம் பாலசமுத்திரம் ஏரி நிரம்பியது
ஆத்தூா்: ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையம் பாலசமுத்திரம் ஏரி திங்கள்கிழமை நிரம்பியது.
கடந்த சில நாள்களாக ஆத்தூா் மற்றும் சுற்று வட்டாரத்தில் பெய்த கனமழையால் பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரி நிரம்பியது. இதனையடுத்து அங்கிருந்து கால்வாய் மூலம் சுமாா் 4 ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டுசெல்லப்பட்டது. இதனால் செல்லியம்பாளையம் பாலசமுத்திரம் ஏரி நிரம்பியது. இதையடுத்து பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனா். இந்த ஏரியால் சுமாா் ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவித்துள்ளனா்.
படவரி...
செல்லியம்பாளையம் பாலசமுத்திரம் ஏரி.