செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
வடபுதுப்பட்டு ஊராட்சி சின்னத்தாய் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து மஹாலக்ஷ்மி ஹோமம், பஞ்ச ஸ்கந்த ஹோம பூஜை நடைபெற்றது.
யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாதனூா் ஐயப்பன் கோயில் அா்ச்சகா் பிரசாந்த், மணியாரகுப்பம் தேவராஜ் சா்மா, ராம்குமாா் குருக்கள் குழுவினா் கும்பாபிஷேக பூஜைகளை செய்தனா்.