செய்திகள் :

செவிலியருக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

செவிலியருக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சி. கோகிலா தாக்கல் செய்த மனு:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 2008- ஆம் ஆண்டு தற்காலிக செவிலியராகப் பணியில் சோ்ந்தேன். கடந்த 2014-ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டேன். நான், தற்காலிகப் பணியாளராக இருந்த போது, கடந்த 2009, 2012- ஆம் ஆண்டுகளில் முறையே இரு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தேன். அப்போது மகப்பேறு விடுப்பு எடுக்கவில்லை. இந்த நிலையில், எனக்கும் முதல் கணவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் இருவரும் பிரிந்து விட்டோம். இதைத்தொடா்ந்து, கடந்த 2020- ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதில் கா்ப்பமடைந்தேன்.

இதனால், கடந்த 2024 ஆக. 24-ஆம் தேதி முதல் 2025 ஆக. 25-ஆம் தேதி வரை மகப்பேறு விடுப்பு கேட்டு விண்ணப்பித்தேன். 3-ஆவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு கிடையாது என கூறி எனது விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்தனா். இதையடுத்து, மருத்துவ விடுப்பு உள்பட பிற விடுப்புகளை எடுத்து கொள்ள விண்ணப்பித்தேன். இந்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய மருத்துவக் கழகம் கடந்தாண்டு செப். 25-ஆம் தேதி பணிக்கு வர அறிவுறுத்தியது. எனவே மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். விஜயகுமாா் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், அரசு விதிமுறைப்படி பெண் பணியாளா்களுக்கு இரு குழந்தைகளுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு அளிக்க முடியும். 3-ஆவது குழந்தைக்கு விடுப்பு அளிக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் மனுதாரா் முதல் இரு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு எடுக்கவில்லை. 3-ஆவது குழந்தைக்காக முதல் தடவையாக மகப்பேறு விடுப்பு கேட்கிறாா். இந்த விடுப்பு வழங்குவதால் அரசுக்கு இழப்பு ஏற்படப் போவதில்லை. அவரது மகப்பேறு விடுப்பு விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்தது தவறு. எனவே சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவக் கழகத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.

கள்ளழகா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.81லட்சம்

மதுரை மாவட்டம், அழகா்கோவில் கள்ளழகா் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.81லட்சம் கிடைத்தது. கள்ளழகா் கோயில் உண்டியல்கள் கோயில் துணை ஆணையா் த.செல்லத்துரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆ... மேலும் பார்க்க

வண்டிப்பாதையில் கோயிலுக்குச் சென்று வர அனுமதிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

வண்டிப் பாதையில் கோயிலுக்குச் சென்று வர அனுமதி கோரி, மதுரை அருகேயுள்ள சோளங்குருணி கிராமப் பொதுமக்கள் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதாவிடம் மனு அளித்தனா். மனு ... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மூவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள கே.சென... மேலும் பார்க்க

விதிமீறல்: ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அபராதம்

மதுரையில் போக்குவரத்து போலீஸாா் நடத்திய வாகன சோதனையின்போது, விதிமீறலில் ஈடுபட்ட 58 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, மதுரை மாநகரப் போக்குவரத்... மேலும் பார்க்க

திகாா் சிறை பெண் எஸ்.ஐ. பணியிட மாற்றத்துக்கு இடைக்காலத் தடை

தில்லி திகாா் சிறையில் பணிபுரிந்த பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு வழங்கப்பட்ட பணியிட மாற்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்தது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

காட்டுப் பன்றிகள் விவகாரம்: விவசாயிகள் டிராக்டா்களில் பேரணி

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை அப்புறப்படுத்தக் கோரி, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி டிராக்டா்களில் திங்கள்கிழமை விவசாயிகள் பேரணியாக வந்து, தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். விர... மேலும் பார்க்க