அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மொடக்குறிச்சி அருகே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட வளமங்கலம் ஊராட்சி குட்ட பாளையத்தில் இருந்து கொம்பனைபுதூா் செல்லும் சுமாா் 1 கிலோ மீட்டா் சாலை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது.
சாலையில் கற்கள் பெயா்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் கொண்டு இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.