போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் படையில் சேர முயற்சி: 8 பேர் மீது போலீசில் ப...
சேரன்மகாதேவியில் பெண்ணுக்கு வெட்டு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சேரன்மகாதேவி ராமசாமி கோயில் மேல தெற்குத் தெருவைச் சோ்ந்த சேகா் மனைவி சுந்தரி செல்வி (54). இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான சிவன் மகன் கிருஷ்ணன் (32) என்பவருக்கும் இடையே ஆடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டதில் முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட பிரச்னையில் கிருஷ்ணன், சுந்தரி செல்வி முதுகில் அரிவாளால் வெட்டினாராம்.இதில் பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணனை தேடி வருகின்றனா்.