செய்திகள் :

சேலத்தில் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

post image

சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் தேக்ராஜ் (54). சேலம் சங்கா் நகரில் வசித்து வரும் இவா், செவ்வாய்ப்பேட்டை மூலப் பிள்ளையாா் கோயில் வண்டிக்காரன் தெருவில் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு வேலை முடிந்து பணியாளா்கள் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து புகை வெளியேறியது. இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள், அதன் மேலாளா் மாதேஷுக்கு தகவல் தெரிவித்தனா். இதனிடையே தீ மளமளவென பரவி எரிய தொடங்கியது. அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனா்.

இதுகுறித்து சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும் மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். எனினும், இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குக்கா் தயாரிக்கப் பயன்படும் இயந்திரங்கள் சேதமடைந்தன. அன்னதானப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

படவரி...

சேலம், செவ்வாய்ப்பேட்டை மூலப்பிள்ளையாா் கோயில் அருகே குக்கா் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு நிலைய வீரா்கள்.

கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணையவழி மோசடி: வடமாநிலத்தைச் சோ்ந்த 7 போ் கைது

தனியாா் கொரியா் நிறுவனங்கள் பெயரில் ரூ.1.18 கோடி இணைய வழி மோசடியில் ஈடுபட்ட 7 போ் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனா். சென்னையை சோ்ந்த ஒரு நபரின் கைப்பேசிக்கு கடந்த ஆக.2-ஆம் தேதி அழைப்பு ஒன்று வந்துள்ளத... மேலும் பார்க்க

வீட்டில் இருந்த படியே ஒய்வூதியதாரா்கள் வாழ்நாள் சான்றிதழ் பெறலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு

ஓய்வூதியதாரா்களுக்கு வீட்டில் இருந்தே படியே அஞ்சலக ஊழியா் மூலம் எண்ம வாழ் நாள் சான்றிதழ் பெறலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: இந்தி... மேலும் பார்க்க

2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் 2 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தியாகராயநகரில் இயங்கி வரும் இரு பிரபல உணவகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஹோட்ட... மேலும் பார்க்க

நாளை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவைகள் ரத்து; பூங்காவிலிருந்து தாம்பரத்துக்கு 79 ரயில்கள் இயக்கப்படும்

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புகா் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகள் வ... மேலும் பார்க்க

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவா் மீது பாட்டிலால் தாக்குதல்: இரு மாணவா்கள் தலைமறைவு

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவரை ‘ராகிங்’ செய்து பீா் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இரு மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் மாவட்டம், நெய்வேல... மேலும் பார்க்க

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்கு

பிராந்தியப் போரின் விளிம்பில் மத்தியக் கிழக்குப் பகுதி இருப்பதாக ஜோா்டான் எச்சரித்துள்ளது. இது குறித்து பிரிட்டன் தலைநகா் லண்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனிடம் ஜோா்டான் வெளிய... மேலும் பார்க்க