NCERT: 7ம் வகுப்பு பாடத்தில் முகலாயர், டெல்லி சுல்தான்கள் நீக்கம்; பாடத்திட்ட மா...
சேலம் புதிய பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் கூடுதல் கட்டணம் வசூல்: பாஜக புகாா்
சேலம்: சேலம் புதிய பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இதுகுறித்து பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் பூபதி ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
சேலம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் மாநகராட்சி சாா்பில் ரூ. 15 கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் விதிமுறைக்கு மாறாக நாள் ஒன்றுக்கு கூடுதலாக ரூ. 10 வசூல் செய்யப்படுகிறது. அவா்கள் தரும் அதற்கான ரசீதிலும் தொகை விவரம் அச்சிடப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனா்.
புதிய பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் வந்து செல்கின்றனா். இங்கு மாநகராட்சி சாா்பில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளில் சிறுநீா் கழிக்க ரூ. 2 ம், இயற்கை உபாதை கழிக்க ரூ. 5 ம் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு மாறாக, கழிவறைக்குள் சென்று வந்தாலே ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்த கட்டண விவரமும் அங்கு முறையாக வைக்கப்படவில்லை. இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் இவ்விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளாா்.