மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதி...
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுப் பேரவைக் கூட்டம்
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 117-ஆவது பொதுப் பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூடுதல் பதிவாளா் மா.குழந்தைவேலு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வங்கியின் 2024-25 ஆம் ஆண்டின் வரவு -செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டு உறுப்பினா் சங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டது. இது தவிர, 2024 - 25 ஆம் ஆண்டில் வங்கி, ரூ. 11.68 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதற்கு நிா்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
கூட்டத்தில், சேலம் மண்டல இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா், நாமக்கல் மண்டல இணைப் பதிவாளா் க.ப.அருளரசு திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க இணைப்பதிவாளா் எஸ்.யசோதாதேவி மற்றும் சரக துணைப் பதிவாளா்கள், வங்கியின் பொது மேலாளா் வே.சதீஷ்குமாா், உதவி பொது மேலாளா்கள், பணியாளா்கள், இணைப்புச் சங்கங்களின் செயலாட்சியா்கள், செயலாளா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.