செய்திகள் :

சைஃப் அலிகான் வழக்கில் புதிய சிக்கல்! கைரேகைகள் பொருந்தவில்லை!

post image

மும்பையில் சைஃப் அலிகானை கத்தியால் தாக்கிய வழக்கில் சேகரிக்கப்பட்ட கைரேகைகள் குற்றவாளியுடன் பதிவாகவில்லை என குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளது.

சைஃப் அலிகான் இல்லத்தில் சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகளில் ஒன்றுகூட குற்றவாளி என கைது செய்யப்பட்டுள்ள வங்கதேசத்தை சோ்ந்த ஷரீஃபுல் இஸ்லாம் ஷேசாத் முகமது ரோஹில்லா கைரேகையுடன் பொருந்தவில்லை.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகா் பகுதியான பாந்த்ராவில் கடந்த 19ஆம் தேதி நடிகா் சைஃப் அலிகான் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த மர்ம நபர், அவரை கத்தியால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியுள்ளார்.

ரயில் நிலைய கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த பிறகு, சைஃப் அலி கானைத் தாக்கியதாக வங்கதேசத்தை சோ்ந்த ஷரீஃபுல் இஸ்லாம் ஷேசாத் முகமது ரோஹில்லா என்ற 30 வயதுடைய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவரை சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், தான் நுழைந்தது நடிகாா் சைஃப் அலி கானின் வீடு என்பது ஷரீஃபுல்லுக்கு தெரியவில்லை. திருடுவதற்காக அந்த வீட்டுக்குள் அவா் நுழைந்துள்ளாா். அவா் மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த விவகாரத்தில் சைஃப் அலிகான் குடியிருப்பில் 19 கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. இதில் ஒன்றில் கூட முகமது ரோஹில்லாவின் கைரேகையுடன் பொருந்தவில்லை என சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து மேலும் சில கைரேகைகளை சேகரித்து சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மும்பை காவல் துறை அனுப்பியுள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.

விமான நிலையக் காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை!

மேற்கு வங்கத்தில் விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் கான்ஸ்டபிள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகரில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் வ... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு அநீதி இழைக்கும் அமெரிக்கா; பிரதமர் மோடி மௌனம்! காங்கிரஸ் குற்றச்சாடு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியது.அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தும் பணியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், நாடு கடத்... மேலும் பார்க்க

ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

அலுவலக சாதனங்களில் செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் தங்களுடைய அல... மேலும் பார்க்க

அமெரிக்காவிலிருந்து 104 இந்தியர்களுடன் அமிர்தசரஸ் வந்த ராணுவ விமானம்

சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர்.அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ராணுவ விமானம் இன... மேலும் பார்க்க

பிற்பகல் 1 மணி: தில்லி தேர்தலில் 33.31% வாக்குகள் பதிவு!

தில்லி பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 33.31% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.தலைநகர் தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு... மேலும் பார்க்க

பக்தி உணர்வால் நிறைந்தேன்: புனித நீராடிய பிரதமர் மோடி பெருமிதம்!

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்களைப் போல நானும் பக்தி உணர்வால் நிறைந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகா கும்பமேளா இந்த... மேலும் பார்க்க