செய்திகள் :

சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டது உண்மைதானா? கேள்வியெழுப்பும் இணையவாசிகள்!

post image

மும்பை : ஹிந்தி நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டது உன்மைதானா அல்லது நாடகமா என்கிற சந்தேகத்தை அவரைப் பொதுவெளியில் பார்த்தபின் சிலர் எழுப்பியுள்ளனர்.

2025-ஆம் புத்தாண்டில் திரைத்துறையினருக்கு பேரதிர்ச்சியளிக்கும் சம்பவமாக மும்பையில் கடந்த மாதம் 16-ஆம் தேதியன்று நடிகர் சைஃப் அலி கானை அவரது வீட்டினுள் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அமைந்துவிட்டது.

இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் இருந்த சைஃப் அலி கான் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிர் தப்பினார்.

இந்த நிலையில், குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த காவல் துறையினர், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து பிஜோய் தாஸ் என்று தனது பெயரை மாற்றிக்கொண்ட வங்கதேச நாட்டவரான முகமது ஷரீஃபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவரே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் என்பதை உறுதி செய்துள்ளது மும்பை காவல்துறை. அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சைஃப் அலி கான், ஓய்வெடுத்து வந்த நிலையில், மும்பையில் திங்கள்கிழமை(பிப். 3) நடைபெற்ற தனது திரைப்படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் நடித்துள்ள ‘ஜுவல் தீஃப் - தி ரெட் சன் சேப்டர்’ திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்நிகழ்ச்சியில் அவர், “உங்கள் அனைவரது முன்னிலையிலும் நிற்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று பேசத் தொடங்கியதும் அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்ததை காண முடிந்தது.

இதனிடையே, சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டது உண்மைதானா என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பியுள்ளனர். இந்த விவாதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

’இவ்வளவு பெரிய காயமடைந்த ஒரு நபரால் எப்படி வெகு சீக்கிரத்தில் குணமடைந்து பொது நிகழ்ச்சியில் பங்கேற்க முடிகிறது?’ என்பதே இந்த சந்தேகத்துக்கான காரணம்.

மேலும், அந்த நிகழ்ச்சியில் சைஃப் அலி கான் உடலில் பெரியளவிலான காயங்கள் ஏற்பட்டதற்கான தழும்புகள் இல்லாததையும் சுட்டிக்காட்டியுள்ள சிலர், அவர் விளம்பரத்துக்காகவே இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றினாரா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், சைஃப் அலி கானின் மனைவியும் நடிகையுமான கரீனா கபூரின் ரசிகர்களும் சைஃப் அலி கானின் ரசிகர்களும், அவரது கழுத்தில் காணப்படும் பெரிய தழும்புகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.

சிம்பு ரசிகர்களுக்காக.. தக் லைஃப் படத்தின் புதிய விடியோ

நடிகர் சிலம்பரசன். டி. ஆரின் பிறந்தநாளான இன்று (பிப்.3), அவர் நடிக்கும் புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில், நடிகர் கமல் ஹாசனுடன் எஸ்டிஆர் முதல்முறையாக இணை... மேலும் பார்க்க

விடாமுயற்சி புதிய மேக்கிங் விடியோ!

அஜித் குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்கிய மேக்கிங் விடியோவை படத் தயாரிப்பு நிறுவனம் இன்று(பிப். 3) வெளியிட்டுள்ளது. லைகா நிற... மேலும் பார்க்க

படத்தைப் பார்த்துவிட்டு பேசுங்கள்! ‘எமர்ஜென்சி’ குறித்து கங்கனா ரணாவத்

இந்திரா காந்தியின் அரசியல் வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு பஞ்சாப், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட சில பகுதிகளில் எதிர்ப்பு எழுந்ததால் மேற்கண்ட இடங்களில் இப்படம் வெளியிடப்படவ... மேலும் பார்க்க

விடாமுயற்சி டிரைலர் நாளை வெளியீடு!

அஜித் குமார் கதாநாயகனாக நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டிரைலர் விடியோ நாளை(ஜன. 16) வெளியிடப்பட உள்ளது.இதுகுறித்த அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனமான லகா இன்றிரவு வெளியிட்டது.The much awaited VIDAAMUYA... மேலும் பார்க்க

கெத்து தினேஷின் புதிய படம்: போஸ்டர் வெளியிட்டு பொங்கல் வாழ்த்து!

அட்டகத்தி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் நன்கு அறியப்பட்டவராக மாறிய நடிகர் தினேஷின் அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பொன்று இன்று(ஜன. 15) வெளியாகியுள்ளது. ‘கருப்பு பல்சர்’ படத்தின் போஸ்டரை இன்று வெளிய... மேலும் பார்க்க