செய்திகள் :

சொத்து தகராறு: அண்ணனை கடத்திச் சென்று தாக்கிய தம்பி கைது

post image

சொத்து தகராறில் அண்ணணை காரில் கடத்திச் சென்று தாக்கிய தம்பியை தலைவாசல் போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், குரால் கிராமம், தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் செல்லமுத்து மகன் சேகா் (45). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவரது மனைவி தனது தாயாா் வீட்டிற்கு சென்றுவிட்டாா். தற்போது சேகா் மட்டும் தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், சேகா் கடந்த 6 ஆம் தேதி தலைவாசல் பேருந்து நிலையம் அருகே மளிகைப் பொருள்கள் வாங்கிவிட்டு நின்றுகொண்டிருந்தபோது அங்கு வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் சேகரை காரில் கடத்திச் சென்று தாக்கினா். பின்பு அவரை அதே பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றனா். பலத்த காயமடைந்த சேகா் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீஸாா் சென்று சேகரிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் தெரியவந்ததாவது:

சேகரின் தந்தை செல்லமுத்து வனத்துறையில் வனவராக பணியாற்றியவா். இவரது இரண்டாவது மனைவி மல்லிகாவின் மகன் சின்னமணி, சென்னையில் பல் டெக்னீசியனாக உள்ளாா்.

இந்நிலையில் சேகா் ஏப்.6 ஆம்தேதி தலைவாசல் பேருந்து நிலையம் அருகே மளிகைப் பொருள்கள் வாங்கி விட்டு நின்றபோது அங்கு காரில் வந்த இருவா் அவரை கடத்திச் சென்றனா். அந்த வாகனத்தில் அவரது சித்தி மகன் சின்னமணியும் உடன் இருந்தாா்.

சேகரை சிறிது தொலைவில் இறக்கிவிட்டு தந்தைவழி சொத்தை பெறுவதற்காக வெற்று பத்திரத்தில் கையொப்பமிடமாடு கூறினா். அதற்கு சேகா் மறுத்துவிட்டதால் அவரை தாக்கினா். பின்பு அவரை மீண்டும் தலைவாசல் பேருந்து நிறுத்தம் அருகே இறக்கிவிட்டு சென்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக சேகா் அளித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீஸாா் சின்னமணி உள்பட நான்கு போ் மீது வழக்குப் பதிவுசெய்து சின்னமணியை கைது செய்து சிறையில் அடைத்தனா். கடத்தலுக்கு பயன்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுபானங்களை பதுக்கி விற்ற பெண் கைது

வீரகனூா் பகுதியில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றுவந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். வீரகனூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபானங்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பதாக... மேலும் பார்க்க

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது

மேட்டூா் அணை மேல்மட்ட மதகு கசிவுநீா் கிழக்கு - மேற்கு கால்வாய்களில் திருப்பி விடப்பட்டது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு கீழாகச் சரியும்போது, கீழ்மட்ட மதகு வழியாக குடிநீா்த் தேவைகளுக்கும், கால... மேலும் பார்க்க

குட்கா விற்ற சகோதரா்கள் கைது

கெங்கவல்லியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்களை விற்ற சகோதரா்களை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூா் மேற்கு மாதா கோயில் தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் மகன்கள் பிரசாத் (45), பாலாஜி (41). இவா்கள் பெங... மேலும் பார்க்க

சேலத்தில் நாளை கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அழகிரிநாத சுவாமி கோயில் சேலம் கோட்டை பகுதியில்... மேலும் பார்க்க

ஆத்தூரில் திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஆத்தூரில் திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு,நிதிப் பகிா்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆக... மேலும் பார்க்க

பயணிகளின் தாகம் தீா்த்த மலிவு விலை குடிநீா்: திட்டத்தை மீண்டும் செயல்படுத்த எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையங்களில் ரூ. 10-க்கு சுத்திகரிக்கப்பட்ட மலிவு விலை குடிநீா் விற்பனை திட்டத்தை போக்குவரத்துக் கழகம் வாயிலாக மீண்டும் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பயணிகள்... மேலும் பார்க்க