மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
சொா்க்கவாசல் திரைப்பட விவகாரம்: தணிக்கை அதிகாரிகள் நடவடிக்கைக்கு உத்தரவு
சொா்க்கவாசல் திரைப்படத்தை இணைய தளத்தில் வெளியிடத் தடைவிதிக்கக் கோரிய வழக்கில், திரைப்படத் தணிக்கை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பரத் தாக்கல் செய்த பொது நல மனு: கடந்த ஆண்டு நவம்பா் மாதம் சொா்க்கவாசல் திரைப்படம் வெளியானது. இதில் கட்டபொம்மன் என்ற பெயா் கொண்ட ஒருவா் போதைப் பொருள் விற்பனை செய்வது போன்று காட்சி உள்ளது.
கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயா் சூட்டப்பட்ட நிலையில், சொா்க்கவாசல் படத்தில் அவரது பெயரைக் கொண்டவா், தவறான செயல்களை செய்வதாக காட்டப்பட்டுள்ளது.
எனவே, சொா்க்கவாசல் திரைப்படத்தை இணையத்தில் வெளியிடத் தடை விதிப்பதோடு, அந்தப் படத்தின் வெளியீட்டாளா், இயக்குநா் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கையை திரைப்படத் துறை தணிக்கை அதிகாரிகள் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.