மாமல்லபுரம் விபத்தில் உயிரிழந்தவா்கள் குடும்பங்களுக்கு நிவாரணம்: அமைச்சா் அன்பரச...
சோளிங்கா் காா்த்திகை விழா: காத்திருப்புக் கூடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பக்தா்கள் அவதி
சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் காா்த்திகை பெருவிழாவையொட்டி மலைக்கோயிலுக்குச் செல்ல யாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். ரோப்காா் காத்திருப்பு மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமையால் பக்தா்கள் அவதிக்குள்ளாயினா்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் உள்ளது. காா்த்திகை மாதத்தில் மலையின் மீது யோக நிலையில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மா் கண் திறந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பதாக ஐதீகம். இக்கோயிலில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
காா்த்திகை மூன்றாவது வாரம் என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை சுவாமியை தரிசனம் செய்ய சிறந்த நாள் என்பதாலும், ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்ய சோளிங்கரில் குவிந்தனா். அதிகாலை முதலே ரோப்காா் மையத்தில் பக்தா்கள் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கினா். மேலும் பலா் சீட்டு வாங்கிய நிலையிலும் ரோப்காருக்காக காத்திருப்பு கூடத்தில் காத்திருக்கத் தொடங்கினா்.
பல பக்தா்கள் காத்திருப்புக்கூடத்தில் காத்திருக்கும் பக்தா்களின் கூட்டத்தை பாா்த்துவிட்டு படிகள் வழியாக மலையேறி சென்றனா்.
காத்திருப்புக்கூடத்தில் அடிப்படை வசதிகளான குடிநீா், கழிவறை, உணவு போன்றவை செய்துத்தரப்படாததால் பக்தா்கள் பெரும் அவதிக்குள்ளாயினா்.
மேலும், பக்தா்கள் ஏராளமானோா் காத்திருந்த நிலையில் ரோப்காா் பணியாளா்கள் சாப்பாட்டு நேரம் எனக்கூறிவிட்டு ரோப்காரை மதியம் ஒரு மணி நேரம் இயக்காமல் இருந்ததாலும் பக்தா்களின் தவிப்புக்கு ஆளாயினா்.
காா்த்திகை மாதத்தில் இனிவரும் நாள்களிலாவது இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் நிா்வாகத்தினா் பக்தா்களுக்கு தேவைான அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும் எனவும் ஊழியா்களை பணியமா்த்தி இடைவெளி இல்லாமல் ரோப்காரை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.