கரியக்கோயில் ஆற்றங்கரை தும்பலில் சிதைந்து வரும் கல்வட்டங்கள்!: கிடப்பில் போடப்பட...
சௌதி அரேபியாவில் பிரதமர் மோடி! 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு!
சௌதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக சௌதி அரேபியாவுக்கு இன்று சென்றடைந்தார். கடந்த 40 ஆண்டுகளில் ஜெட்டா நகரத்துக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார். சௌதி அரேபியாவின் போர் விமானங்கள் பிரதமர் மோடியை அழைத்துச் சென்றன.
அவருக்கு 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெட்டா நகரத்துக்கு செல்வதற்கு முன்னதாக பிரதமர் மோடி பேசுகையில், “சௌதி அரேபியாவுடனான வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன” என்றார்.
இதையும் படிக்க: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது!
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், ஹஜ் யாத்திரையில் இந்திய பக்தர்களுக்கான விசா ஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி கலந்தாலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டில் சௌதி அரேபியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதைப் பெற்ற பிரதமர் மோடி, இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலையைப் பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியர்களின் 2-வது வீடு என்றழைக்கப்படும் சௌதி அரேபியாவில் 27 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி, சௌதி அரேபியாவுக்கு செல்வது இது மூன்றாவது முறையாகும். இருப்பினும், ஜெட்டா நகரத்துக்கு செல்வது இதுவே முதல் முறை. 2023 ஆம் ஆண்டு சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் அரசுமுறை பயணமாக இந்தியா வந்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: தங்கம் விலை முதல்முறையாக ரூ.1 லட்சத்தை தொட்டது!