செய்திகள் :

ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

post image

ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா அறக்கட்டளை மீது அவதூறு பரப்பும் விதமாக பத்திரிகையாளர் வெளியிட்ட விடியோவை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்திரிகையாளரும் யூடியுபருமான ஷ்யாம் மீரா சிங் தனது யூடியுப் பக்கத்தில் ஈஷா அறக்கட்டளையில் சர்ச்சைக்குரிய பல சம்பவங்கள் நடைபெறுவதாக விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஜக்கி வாசுதேவ் அவரது ஆசிரமத்தில் சிறுமிகளை மேலாடையின்றி நிற்கச் சொல்வதாக அவர் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

இதுதொடர்பாக, ஷ்யாம் மீரா சிங் ஈஷா அறக்கட்டளைக்கு மின்னஞ்சல் அனுப்பி கேள்வி கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈஷா அறக்கட்டளை சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதையும் படிக்க | ஹோலி பண்டிகை: மசூதிகளை திரையிட்டு மூட காவல்துறை உத்தரவு!

"ஷ்யாம் மீரா சிங் இதற்கு முன்பு ஒரு பிரபலமான நபர் பற்றி இதேபோன்ற விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, பிரபலமானவர்களைத் தேர்ந்தெடுத்து விளம்பரத்திற்காக பரபரப்பான விடியோக்களை உருவாக்குவதே அவரது நோக்கம்" என்று ஈஷா அறக்கட்டளையின் வழக்குறைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஷ்யாம் மீரா சிங்

ஈஷா அறக்கட்டளை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளடக்கங்கள் அவதூறு ஏற்படுத்துபவை என்றும் இது பொது மக்களின் பார்வையில் சம்பந்தப்பட்ட நபரின் நற்பெயரை கெடுப்பதுபோல உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவதூறு விடியோவை நீக்குமாறு ஷ்யாம் மீரா சிங்கிற்கு உத்தரவிட்ட அவர், பொதுமக்கள் அதனை பகிரவும், சமூக ஊடகத் தளத்திலும் பதிவேற்றவும் தடை விதித்தார்.

இந்த வழக்கு விசாரணை வருகிற மே 9 அன்று மீண்டும் நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

எண்ணெய் வயல்கள் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்: மாநில உரிமைகள் பறிபோகாது -மத்திய அரசு

‘எண்ணெய் வயல்கள் (ஒழுங்குபடுத்துதல் மற்றும் வளா்ச்சி) சட்டத்திருத்ததால் மாநில உரிமைகள் பறிபோகாது மற்றும் பொது, தனியாா் நிறுவனங்களுக்கிடையேயான சமநிலை பாதிக்காது’ என்று மத்திய அரசு புதன்கிழமை உறுதியளித... மேலும் பார்க்க

பாஜகவின் போலி ஹிந்துத்துவம்: மம்தா விமா்சனம்

போலியான ஹிந்துத்துவத்தை மேற்கு வங்கத்தில் திணிக்க பாஜக முயற்சித்து வருகிறது என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் திரிணமூல் காங்கிரஸை சோ்... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு; ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்பு! -கேரள உயா் கல்வி அமைச்சா்

மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் ஹிந்தி திணிப்பை எதிா்ப்பதாகவும் கேரள உயா் கல்வித் துறை அமைச்சா் ஆா்.பிந்து தெரிவித்துள்ளாா். மும்மொழிக் கொள்கை, ஹிந்தி திணிப்பு தொடா்பாக மத்திய அரசு,... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதானி குழும மின் உற்பத்தி திட்டம்: மக்களவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மின்னுற்பத்தி செய்வதற்கான அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் குறித்து மத்திய அரசின் பதில் திருப்தி அளிக்காததால், மக்களவையில் இருந்து எதிா்க்கட்சி எம்.பி.... மேலும் பார்க்க

மராத்தியில் பேசுமாறு பஞ்சாயத்து அலுவலரைத் திட்டிய நபர் கைது!

கர்நாடக அரசு ஊழியரை மராத்தியில் பேசுமாறு தகாத வார்த்தைகளால் திட்டிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சினைக்க... மேலும் பார்க்க

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து பிப்ரவரியில் 3.61 சதவீதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும் பார்க்க