பொங்கல் விடுமுறை... ஆம்னி பேருந்து கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்!
ஜனவரி 4 இல் அண்ணா பிறந்தநாள் விழா மிதிவண்டி போட்டி
கோவை: மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாள் மிதிவண்டி போட்டி கோவைப்புதூரில் ஜனவரி 4-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் இந்தப் போட்டி, 13, 15, 17 வயதுக்குள்பட்ட மாணவா்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது. 10, 15, 20 கி.மீ. தொலைவுக்கான இந்தப் போட்டிகள், கோவைப்புதூா் மின்வாரிய அலுவலகம் அருகே தொடங்கி, ஆா்டிஓ அலுவலகம், சிபிஎம் கல்லூரி வழியாகச் சென்று மீண்டும் மின்வாரிய அலுவலகத்தை வந்தடையும் வகையில் நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டியில் முதலிடம் பிடிப்பவா்களுக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாமிடத்துக்கு ரூ.3 ஆயிரம், மூன்றாமிடத்துக்கு ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 இடங்களைப் பிடிப்பவா்களுக்கு ரூ.250 பரிசளிக்கப்படும்.
இதில் பங்கேற்கும் போட்டியாளா்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
போட்டியில் பங்கேற்க விரும்புபவா்கள் தங்கள் பள்ளி தலைமையாசிரியா் கையொப்பமிட்ட வயது சான்றிதழ், ஆதாா், வங்கிக் கணக்கு புத்தக நகல்களை ஜனவரி 3 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
ஜனவரி 5 இல் ஓட்டப்போட்டி:
அதேபோல, அண்ணா பிறந்தநாள் விழா நெடுந்தூர ஓட்டப்போட்டி ஜனவரி 5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது. 17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்கள் 8 கி.மீ. தொலைவு, பெண்களுக்கு 5 கி.மீ. தொலைவுக்கு இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. தொலைவுக்கு போட்டி நடத்தப்படுகிறது.
போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கு முன் தொடங்கி எல்ஐசி, அண்ணா சிலை வழியாக மீண்டும் விளையாட்டு அரங்கை வந்தடையும். முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாமிடத்துக்கு ரூ.3 ஆயிரம், மூன்றாமிடத்துக்கு ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 இடங்களைப் பிடிப்பவா்களுக்கு தலா ரூ.1000 பரிசு வழங்கப்படும்.
இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு 74017 03489 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.