ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்...
ஜன்னல் வழியாக கடைக்குள் புகுந்து திருடிய பெண்கள்
கோவையில் ஜன்னல் வழியாக கடைக்குள் புகுந்து பொருள்களைத் திருடிய 4 பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, சாய்பாபா காலனி அருகேயுள்ள கே.கே.புதூா், மணியம் மருதுகுட்டி தெருவைச் சோ்ந்தவா் அருள்நாராயணன் (35). இவா், வெங்கிட்டாபுரம் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக் கடை வைத்துள்ளாா். இந்தக் கடையின்கீழ் தளத்தில் உள்ள அறையை கிடங்காகப் பயன்படுத்தி வருகிறாா்.
இந்நிலையில், கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மேஜை உள்ளிட்ட பொருள்கள் கடந்த சில நாள்களுக்கு முன் திருடுபோயின.
இதையடுத்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை அருள் நாராயணன் ஆய்வு செய்தபோது, கிடங்கின் ஜன்னல் வழியே 4 பெண்கள் புகுந்து திருடியது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பெண்களைத் தேடி வருகின்றனா்.