பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
ஜன நாயகன் படப்பிடிப்பு அப்டேட்!
விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். ஆக்சன் படமாகவும் அதேநேரம் சமூக பிரச்னையைப் பேசும் படமாகவும் இது உருவாகி வருகிறதாம்.
அண்மையில், பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
மேலும், தமிழ்ப் புத்தாண்டான ஏப். 14 ஆம் தேதி அன்று இப்படத்தின் சிறப்பு கிளிம்ஸ் விடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்ததாகவும் முக்கியமான சண்டைக் காட்சி விரைவில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: 3 மாதங்கள் சூப் மட்டுமே... இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யம்!