பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
ஜப்பானில் மாநாடு!
நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் ஜப்பானில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான திரைப்படம் மாநாடு. 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.
ரூ. 100 கோடி வரை வசூலித்து மீண்டும் சிம்புவின் திரை வாழ்க்கைக்கு வெளிச்சத்தைக் கொடுத்தது. நடிகர் எஸ். ஜே. சூர்யாவுக்கும் பெரிய ஹிட்டாக அமைந்தது.
முக்கியமாக, லூப் ஹோல் கதையில் படத்தின் திரைக்கதையை நான் லீனியர் பாணியில் அமைத்தது ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், மாநாடு திரைப்படம் மே மாதம் ஜப்பான் நாட்டில் வெளியாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
நல்ல படம் என்பது ஒரு அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும். #மாநாடு தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது @SilambarasanTR_@vp_offl@iam_SJSuryah@thisisysr… https://t.co/IZV7tvX9AT
— sureshkamatchi (@sureshkamatchi) April 8, 2025
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ”நல்ல படம் என்பது ஒரு அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும். மாநாடு தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஜன நாயகன் படப்பிடிப்பு அப்டேட்!