ஜப்பான் ஏர்லைன்ஸில் சைபர் தாக்குதல்; விமானங்கள் தாமதம், டிக்கெட் விற்பனை நிறுத்தம்
டோக்கியோ: ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வியாழக்கிழமை அதிகாலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து விமானங்களுக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு, சர்வதேச விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் ஏர்லைன்ஸ் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:
ஜப்பான் ஏர்லைன்ஸ் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 7.25 மணியளில் சைபர் தாக்குதுலுக்கு(தொழில்நுட்ப கோளாறு) உள்ளானது. இதனால் குறைந்தது 14 உள்நாட்டு விமானங்களுக்கான சேவையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதம் ஏற்பட்டுள்ளது மற்றும் சில சர்வதேச விமானங்களுக்கான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க |அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு: அதிகாரபூா்வமாக உறுதி செய்த பைடன்
நிலைமை சீரானதும் வாடிக்கையாளர்களுக்கு அது குறித்த தகவல்கள் பகிரப்படும். சிரமத்திற்கு வருந்துகிறோம் என தெரிவித்துள்ளது.
மேலும், பிரச்னைக்கான காரணத்தை அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஒரு ரவுட்டரை ஷட் டவுன் செய்துள்ளோம். இதனால் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிக்கெட் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் முன்பதிவு செல்லுபடியாகும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது உலகளவில் கவனத்தை பெற்றுள்ளது.