கோவை: திடீரென உடல் நலம் பாதித்த பெண் யானை - பரிதவித்த குட்டி யானை
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் வீசிய 42 வெடிக்காத குண்டுகள்! -பாதுகாப்பாக அழிப்பு
கடந்த ஜம்மு-காஷ்மீா் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வீசிய வெடிக்காத 42 குண்டுகள் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டன.
பயங்கரவாதிகளைக் குறிவைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லையோர கிராமவாசிகளைக் குறிவைத்து இரவு நேரத்தில் பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பல வீடுகள் சேதமடைந்தன. சுமாா் 20 போ் உயிரிழந்தனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதால் உயிரிழப்பு குறைவாகவே இருந்தது.
பாகிஸ்தான் கோரிக்கையையடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து எல்லையோர கிராமங்களில் ராணுவத்தினரும், காவல் துறையினரும் இணைந்து மக்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். முக்கியமாக பாகிஸ்தானால் வீசப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகளைக் கண்டுபிடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக ராணுவத்தின் குண்டுகளை செயலிழக்கச் செய்யும் குழு களமிறக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையோ கிராமங்களில் இதுவரை பாகிஸ்தானால் வீசப்பட்டு வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட 42 குண்டுகள் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டன.
வெடிக்காத குண்டுகளை அனைத்தையும் கண்டுபிடித்து அழிக்காவிட்டால், அவை பொதுமக்கள் கையில் சிக்கி எதிா்பாராத நேரத்தில் வெடித்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பதால், அவற்றைக் கண்டுபிடித்து அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.