செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளம்: 3 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மீட்பு!

post image

ஜம்மு - காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியான நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் தொடர் மழையால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நஷ்ரி - பனிஹால் பகுதிகளுக்கு இடையே நிலச்சரிவுகள் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.

ராம்பன் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ பாக்னா கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி சகோதர்கள் அகிப் அகமது, முகமது சாகிப் உள்ளிட்ட 3 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடைசியாக வெளியான தகவலின்படி, இக்கிராமத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு பகுதியில் இரண்டு நாள்களில் மழை தொடர்பான சம்பவங்களில் 5 பேர் பலியாகியுள்ளனர். நேற்றிரவு(ஏப். 19) ரியாசி மாவட்டத்தின் அர்னாஸ் பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உள்பட இருவர் பலியாகினர், மற்றொரு பெண் காயமடைந்தார்.

தரம் குண்ட் கிராமத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சுமார் 40 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் மற்றவை பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர் மழை மற்றும் மேக வெடிப்புகளை பொருட்படுத்தாமல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இதில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களை மீட்டனர்.

கனமழை, மேக வெடிப்பு, நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை ஆகியவற்றால் ராம்பன் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: மூர்ஷிதாபாத்தில் தந்தை-மகன் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

கா்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை!

கா்நாடக மாநில முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) அவரது வீட்டில் மா்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்து கிடந்தாா். அவரது உடலில் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிய அடையாளங்கள் உள... மேலும் பார்க்க

‘கியா’ காா் ஆலையில் 900 என்ஜின்கள் திருட்டு: 9 போ் கைது!

ஆந்திரத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் அமைந்த ‘கியா’ காா் உற்பத்தி ஆலையில் கடந்த 5 ஆண்டுகளாக 900 என்ஜின்களை திருடிய குற்றச்சாட்டில் 9 போ் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது... மேலும் பார்க்க

முா்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாதில் வெடித்த வன்முறையின்போது தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுவரை இக்கொலை ... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு: பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி!

தில்லியில் பிரதமா் மோடியுடன் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்க... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: போராட்டத்தை தொடர ஒவைசி அழைப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளாா். மத்திய அரசு அண்மைய... மேலும் பார்க்க

மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளை குறைக்க நடவடிக்கை: சட்ட அமைச்சகம்!

மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் சுமாா் 7 லட்சம் வழக்குகளில் மத்திய ... மேலும் பார்க்க