ஜம்மு-காஷ்மீர்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!
ஜம்மு-காஷ்ரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதல் உயிரிழந்தோருக்கு அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா நிவாரணம் அறிவித்துள்ளார்.
பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக கடந்த 2018ல் புல்வாமாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.
இக்கொடூர தாக்குதலுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட லஷ்கர் ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபரண்ட் பொறுப்பேற்றுள்ளது. பயங்கரவாதிகள் ஜம்முவின் கிஷ்த்வாரில் எல்லை கடந்து. கோகர்நாத் வழியாக பைசாரனுக்கு வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக முதல்வர் ஒமர் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில்,
தாக்குதல் குறித்துச் செய்தியறிந்து நம்பமுடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தேன். சுற்றுலாப் பயணிகள் மீதான இத்தாக்குதல் அருவருப்பானது.
மேலும் பெஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.