செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா்: குடியரசு தின நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல்- பலத்த பாதுகாப்புடன் கொண்டாட்டம்

post image

ஜம்மு-காஷ்மீரில் துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்ற குடியரசு தின நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பலத்த பாதுகாப்புடன் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தையொட்டி, ஜம்முவில் எம்.ஏ.மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதான நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தேசியக் கொடி ஏற்றினாா். முதல்வா் ஒமா் அப்துல்லா தலைமை விருந்தினராக பங்கேற்றாா்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, பல்வேறு அரசுத் துறைகளின் அதிகாரபூா்வ மின்னஞ்சல் முகவரிக்கு சனிக்கிழமை இரவு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இதையடுத்து, எம்.ஏ.மைதானம் முழுவதும் காவல் துறை அதிகாரிகள் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினா். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த மின்னஞ்சலை அனுப்பிய நபரை கைது செய்ய சிறப்புப் படை அமைக்கப்பட்டது.

காஷ்மீரில்...: காஷ்மீா் பகுதியில் பலத்த பாதுகாப்புடன் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்ச்சிக்கு துணை முதல்வா் சுரீந்தா் குமாா் செளதரி தலைமை தாங்கினாா். இந்நிகழ்ச்சியில் சுமாா் 20 ஆயிரம் போ் கலந்துகொண்டனா். இதேபோல், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காஷ்மீரில் வழக்கமாக குடியரசு தின கொண்டாட்டத்தின்போது கைப்பேசி இணைய சேவைகள் முடக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு இணைய சேவை முடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா் மோடி நம்பிக்கை

2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தால், நாட்டின் விளையாட்டுத் துறை புதிய உச்சத்தை எட்டும் என பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அந்த வாய்ப்பை பெறுவதற்காக த... மேலும் பார்க்க

ஹிந்து நம்பிக்கைகள் அவமதிப்பு: கார்கேவுக்கு பாஜக கண்டனம்

உத்தர பிரதேச மாநிலம், திரிவேணி சங்கமத்தில் பாஜக தலைவர்கள் புனித நீராடியதை விமர்சனம் செய்ததன் மூலம் ஹிந்துகளின் நம்பிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதித்துள்ளார் என்று மகாராஷ்டிர பாஜக தல... மேலும் பார்க்க

பெரும் செல்வமுள்ள கட்சி பாஜக: ரூ.7,113 கோடி கையிருப்பு

பாஜகவிடம் ரொக்கம் மற்றும் வங்கி இருப்பாக ரூ.7,113 கோடி உள்ளது தோ்தல் ஆணையத்திடம் அக்கட்சி அளித்த ஆண்டு தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம், நாட்டில் பெரும் செல்வமுள்ள கட்சியாக பாஜக திகழ... மேலும் பார்க்க

கும்பமேளா: சிறப்பு ரயில் கதவுகள் திறக்காததால் ஆத்திரமடைந்த பயணிகள் கல்வீசி தாக்குதல்

மகா கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் கதவுகள் திறக்கப்படாததால் மத்திய பிரதேசத்தின் சத்தா்பூரில் உள்ள 2 ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் ஆத்திரமடைந்து, ரயில்கள் மீது கற்களை வீசி தாக... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: லட்சத்துக்கு மேற்பட்ட வங்கதேசத்தினருக்கு போலி பிறப்புச் சான்றிதழ்; கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை

மகாராஷ்டிரத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தவா்களும், மியான்மரில் இருந்து புகுந்த ரோஹிங்கயாக்களும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பெற்றுள்ளதாக எழுந்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இன்று மௌனி அமாவாசை புனித நீராடல்

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசை (தை அமாவாசை) புனித நீராடல் புதன்கிழமை (ஜன.29) நடைபெறுகிறது. உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 1... மேலும் பார்க்க