செய்திகள் :

ஜாகீர் கான் போல பந்துவீசும் சிறுமி..! சச்சின் பகிர்ந்த விடியோ!

post image

முன்னாள் இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் போலவே பந்துவீசும் சிறுமியின் விடியோவை சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த விடியோ பல லட்சம் பார்வைகளைக் கடந்து பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட விடியோவில், “ வழுவழுப்பாக, அதிகம் மெனக்கெடாமல், பார்க்க அழகாக இருக்கிறது. சுஷீலா மீனாவின் பந்துவீச்சு பாணி ஜாகீர் கான் உங்களைப் போலவே இருக்கிறது. நீங்களும் பார்த்தீர்களா?” எனக் குறிப்பிட்டு அந்த சிறுமியின் விடியோவை பதிவிட்டுள்ளார்.

இந்தச் சிறுமி ராஜஸ்தானில் தாரியாவாத் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அறியப்படுகிறது. சமூக வலைதளங்களில் இவரது விடியோ வைரலாகி வருகிறது.

இதற்கு ஜாகீர் ஜான், “நீங்களே சொல்லிவிட்ட பிறகு நான் மறுக்க முடியுமா. அந்தச் சிறுமியின் பந்துவீசும் முறை மிகவும் அழகாக வியக்கத்தக்க வகையில் இருக்கிறது. அவர் ஏற்கனவே தனது நம்பிக்கையை அளித்ததுபோல் இருக்கிறது” எனப் பதிலளித்துள்ளார்.

ஜாகீர் கான் (46) இந்தியாவின் முன்னாள் இடதுகை வேகப் பந்துவீச்சாளர். டெஸ்ட்டில் 311, ஒருநாள் போட்டிகளில் 282 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

தற்போது, ஜாகீர் கான் வர்ணனையாளராகவும் லக்னௌ அணிக்கு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.

பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்வதே இலக்கு..! ஸ்ரேயாஷ் ஐயர் பேட்டி!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்வதே முக்கியமான இலக்கு என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். 2020இல் ரிக்கி பாண்டிங் தில்லை அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக இருக்கும்போது இறுதிப்போட்டி வரை சென்றது குறி... மேலும் பார்க்க

கடைசி ஒருநாள்: ஆப்கானிஸ்தானுக்கு 128 ரன்கள் இலக்கு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொ... மேலும் பார்க்க

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் நம்பிக்கை!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான... மேலும் பார்க்க

உற்சாகமாக இருக்கிறது..! ஆஸி. அணித்தேர்வு குறித்து முன்னாள் வீரர் கருத்து!

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இளம் வீரரை சேர்த்திருப்பது உற்சாகத்தை அளிப்பதாக முன்னாள் வீரர் கூறியுள்ளார். பார்டர் - கவாஸ்கர் தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருக்கி... மேலும் பார்க்க

டாப் ஆர்டர் நன்றாக விளையாட வேண்டும்; ரவீந்திர ஜடேஜா வலியுறுத்தல்!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட வேண்டும் என இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேல... மேலும் பார்க்க

முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடிவாரண்ட்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு வருங்கால வைப்பு நிதி முறைகேடு வழக்கில் கைதுசெய்ய ஆணை பிறக்கப்பட்டுள்ளது. சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ் தனியார் நிறுவனத்தின் இயக்குநர் என்ற முற... மேலும் பார்க்க