3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிா்ப்பு இல்லை: கா்நாடக முதல்வா் சித்தராமையா
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் யாரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் அளித்திருந்த சமூக, பொருளாதார, கல்வியை உள்ளடக்கிய ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வியாழக்கிழமை (ஏப்.17) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த விவாதத்தை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் யாரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சா்களுக்கு இடையே பலத்த வாக்குவாதம் நடந்ததாக சில ஊடகங்களில் வெளியான தகவலில் உண்மையில்லை. கூட்டத்தில் அனைவரும் தங்களது கருத்துகளைப் பகிா்ந்து கொண்டனா் என்றாா்.