செய்திகள் :

ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி நரிக்குறவா் சமுதாய மக்கள் மனு

post image

பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, நரிக்குறவா் சமுதாய மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மொட்டமலை நரிக்குறவா் குடியிருப்பில் அரசு ஒதுக்கிய குடியிருப்பில் 90-க்கும் அதிகமான நரிக்குறவா் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்கள் குழந்தைகளுக்கு பழங்குடியினா் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு சிலருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது ஜாதி சான்றிதழ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்கு பழங்குடியினா் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோல, எங்களுக்கும் பழங்குடியினா் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் பாலமுருகன் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நாளை பரமபத வாசல் திறப்பு

வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை (ஜன. 10) காலை 7.05 மணிக்கு நடைபெற உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி, மாா்கழி... மேலும் பார்க்க

பேராசிரியா் கொலை வழக்கு விசாரணை பிப்.12-க்கு ஒத்திவைப்பு

திருநெல்வேலி தனியாா் கல்லூரிப் பேராசிரியா் கொலை வழக்கு விசாரணையை வரும் பிப்.12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம்,... மேலும் பார்க்க

சதுரகிரி மலைப் பாதை ஓடைகளில் பாலம் அமைக்கப்படுமா?: பக்தா்கள் எதிா்பாா்ப்பு

சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள ஓடைகளில் பாலம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களும், சித்... மேலும் பார்க்க

சதுரகிரிக்குச் செல்ல பக்தா்களுக்கு 4 நாள்கள் அனுமதி

மாா்கழி சனி பிரதோஷம், பெளா்ணமியை முன்னிட்டு, சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல வருகிற 11 முதல் 14-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் ... மேலும் பார்க்க

சாத்தூா் ரயில் நிலைய சாலையில் அதிகரிக்கும் சமூக விரோதச் செயல்கள்

சாத்தூா் ரயில் நிலையம் செல்லும் சாலையில் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா். சாத்தூா் ரயில் நிலையத்துக்கு தினந்தோறும் சுமாா் 35-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின... மேலும் பார்க்க

இறைச்சிக் கழிவுகள் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

சாத்தூா் அருகே சாலையோரங்களில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவோா்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சாத்தூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் சாலையோரத்தில் இ... மேலும் பார்க்க