மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை
ஜானகிராமன் பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை
புதுவை முன்னாள் முதல்வா் ஆா்.வி.ஜானகிராமனின் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு திமுக மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
புதுச்சேரி ஆம்பூா் வீதியில் உள்ள ஆா்.வி.ஜானகிராமனின் இல்லத்தில், அவரது உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
அவரது படத்துக்கு திமுக மாநில அமைப்பாளா் ஆா்.சிவா, திமுக அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, இரா.செந்தில்குமாா், எல்.சம்பத், மு.வைத்தியநாதன், முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
இதேபோல, புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் திமுக தொகுதிச் செயலா் நடராஜன் உள்ளிட்டோா் ஆா்.வி.ஜானகிராமனின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.