தூத்துக்குடி: `அடிக்கடி குரைக்கின்றன'- குடிபோதையில் நாயை கல்லால் தாக்கிக் கொன்ற ...
ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரால் புற்றுநோய் பாதிப்பா? - அமெரிக்க நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
அமெரிக்க நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரைப் பயன்படுத்தி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு $966 மில்லியன் (இந்திய ரூபாயில் சுமார் 85,790 கோடி ரூபாய்) வழங்க J&J நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது அமெரிக்க நீதிமன்றம்.
அமெரிக்காவைச் சேர்ந்த மைய் மூர் (Mae Moore) என்ற 88 வயதான மூதாட்டி, மீசோதெலியோமா (Mesothelioma) என்ற அரியவகை புற்றுநோயால் கடந்த 2021ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அவர் நீண்ட காலமாகவே ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரைப் பயன்படுத்தும் பழக்கமுடையவர்.
அவரது உயிரிழப்பிற்குக் காரணம், தொடர்ச்சியாக நச்சுத்தன்மை கொண்ட பவுடரைப் பயன்படுத்தியதுதான் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

நச்சுத்தன்மை கொண்ட வாசனையை அல்லது நச்சுத்தன்மை கொண்ட பவுடர்களைத் தொடர்ச்சியாக சுவாசிப்பதால் நுரையீரல், மார்பகம், வயிறு, இதயம் போன்ற பகுதிகளில் மீசோதெலியோமா என்ற அரியவகை புற்றுநோய் ஏற்படுகிறதாம்.
ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரை நீண்ட காலம் பயன்படுத்திய மை மூர் என்பவருக்கும் இப்படித்தான் இந்த மீசோதெலியோமா புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரைப் பயன்படுத்தியதால்தான் மைய் மூர் உயிரிழந்தார் என குற்றம்சாட்டி அவரது குடும்பத்தினர், 2021ம் ஆண்டே கலிபோர்னியாவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனதிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் தற்போது ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், இறந்த மூரின் குடும்பத்திற்கு $966 மில்லியன் (இந்திய ரூபாயில் சுமார் 85,790 கோடி ரூபாய்) வழங்க J&J நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதில் $16 மில்லியன் (சுமார் 14 கோடி ரூபாய்) இழப்பீடாகவும், $950 மில்லியன் (சுமார் 84,000 கோடி ரூபாய்) தண்டனைத் தொகையாகவும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
J&J நிறுவனம் தற்போதும் இந்த தீரப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளது.