மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடங்கும்: மேலா...
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி
வயிற்றுக் கோளாறு காரணமாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “உடல்நலம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக நான் இன்று காலை மருத்துவமனையில் (ஜாம்ஷெட்பூர்) அனுமதிக்கப்பட்டேன்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, கவலைப்பட ஒன்றுமில்லை.
பொங்கல்: அரசு பேருந்துகளில் 8.73 லட்சம் பேர் பயணம்
இப்போது, நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். மிக விரைவில், முழு ஆரோக்கியமாக மாறிய பிறகு நான் உங்கள் அனைவருக்கும் மத்தியில் திரும்புவேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
செரகில்லா தொகுதி பாஜக எம்எல்ஏவான சம்பயி சோரன் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.