செய்திகள் :

ஜார்க்கண்ட்: ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - பயணிகள் மயக்கம்!

post image

ராஞ்சி : கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ரயில் நிலையங்களில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

புது தில்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 18 பேர் சனிக்கிழமை இரவு பலியாகினர். இந்த அசம்பாவிதம் நாடெங்கிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயில் நிலையங்களி பாதுகாப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை ரயில்வே துறை எடுத்து வருகிறது.

இதனிடையே, ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜுக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை(பிப். 16) பயணிகள் அதிகமானோர் திரண்டிருந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன்காரணமாக, பயணிகள் சிலர் மயக்கமடைந்து விழுந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கமடைந்த 5 பயணிகளுக்கும் மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் உடல்நிலை சீரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது ராஞ்சியில்? ராஞ்சியிலிருந்து தில்லிக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் செல்ல அதிகமான பயணிகள் ராஞ்சி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை(பிப். 16) மாலை திரண்டிருந்தனர். அப்போது ஜார்க்கண்ட் சுவர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் (12817) ரயில் அங்கு வந்தடைந்தது. அதில் ஏற்கெனவே பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்த நிலையில், ராஞ்சி ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளும் அந்த ரயிலில் ஏற முற்பட்டபோது, டிக்கெட் எடுக்காமல் அந்த ரயிலில் ஏறிக்கொண்ட பயணிகள் சிலர் பெட்டிகளின் கதவுகளை மூடியதுடன் திறக்க முடியாதபடி பூட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்னொருபுறம், டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏற காத்திருந்த பயனிகளுக்கு இது பெரும் தலைவலியாக உருவெடுத்தது. அவர்களால் அந்த ரயில் பெட்டிகளில் ஏற முடியவில்லை.

இந்த பரபரப்பான சூழலில், ஒருசில குடும்பங்களில், சிலர் ரயிலில் ஏறிவிட்டனர் எனினும், பிறர் ஏற முடியாமல் தவித்தனர். ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் ரயில் கதவுகளை திறக்க முயற்சிப்பதற்குள் ரயில் புறப்படத் தயாரானது. நல்வாய்ப்பாக எவ்வித உயிர்சேதமும் காயமோ யாருக்கும் ஏற்படவில்லை.

இதனையடுத்து, ரயிலில் ஏற்கெனவே உள்ள பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து டிக்கெட்டுகள் வழங்குமாறு ரயில் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க