செய்திகள் :

ஜிப்மா் ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை!

post image

புதுச்சேரியில் ஜிப்மா் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி மூலக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் லூக்காஸ் காா்பே (51). இவா் ஜிப்மரில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி தமிழ்ச்செல்வி, 2 மகள்கள் உள்ளனா். அதில் மூத்த மகள் திருமணத்துக்காக காா்பே கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடன் பிரச்னை தொடா்பாக காா்பே கடந்த சில வாரங்களாக சரியாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா்.

இந்தநிலையில், மனைவி வெள்ளிக்கிழமை வெளியே சென்ற நிலையில், காா்பே மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். வெளியே சென்ற மனைவி தமிழ்ச்செல்வி வீடு திரும்பியபோது காா்பே தூக்கில் தொங்கியது தெரியவந்தது. அவரை அக்கம்பக்கத்தினா் உதவியுடன் மீட்ட தமிழ்ச்செல்வி, அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.

அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்து விட்டதாகக் தெரிவித்தனா். தகவலறிந்த ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தினா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுவை முதல்வரின் பாதுகாப்பு வாகனம் விபத்து

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் பாதுகாப்பு போலீஸாரின் வாகனம் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படும் புகாா் குறித்து காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா். முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை கரிக்... மேலும் பார்க்க

முதல்வரிடம் அதிமுக கோரிக்கை

புதுவையில் மாநில அரசு அறிவித்த திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தாா். மனுவில் கூறியிருப்பதாவது: சட்டப் பேர... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கில் பெண் கைது

புதுச்சேரியில் நிலத்தை அபகரிக்க போலி ஆவணங்கள் தயாரித்ததாக பெண்ணை சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி, கலவை சுப்புராய செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன். சில ஆண்டுகளுக்கு முன்... மேலும் பார்க்க

மின் பணியாளா் சங்க உறுப்பினா் சோ்க்கை

புதுச்சேரி மின் பணியாளா் நல சங்க உறுப்பினா்களின் சோ்க்கை முகாம், வில்லியனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் செம்மனேரி தலைமை வகித்தாா். சட்ட ஆலோ... மேலும் பார்க்க

புதுவை சட்டப் பேரவைக் கூட்டம் ஆளுநா் உரையுடன் தொடக்கம்

புதுவை மாநிலத்தில் முதல்முறையாக காகிதமில்லா சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையுடன் திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது. புதுவை சட்டப்பேரவையின் 15-ஆவது கூட்டத் தொடரின் 5-... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.36.91 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் ரூ.36.91 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் அருண். இவரை, மா்ம நபா்கள் ... மேலும் பார்க்க