ஜி.கே.மணி இல்ல திருமண விழா தமிழக முதல்வர் முதல் நடிகர் விஜய் மகன் வரை பங்கேற்ற பிரபலங்கள்..!
சேலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி எம்எல்ஏவின் மைத்துனர் தன்ராஜ்- சாரதா ஆகியோரின் மகன் டாக்டர் சேது நாயக் மற்றும் கிருஷ்ணமூர்த்தி- விஜயலட்சுமி என்பவர்களின் மகள் டாக்டர் விமலாம்பிகை ஆகியவரது திருமணம் சேலத்தில் இன்று நடக்க இருக்கிறது. முன்னதாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை வரலட்சுமி மகாலில் நடந்தது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி கலந்து கொண்டனர்.
மேலும் நடிகர்களில் சசிகுமார், சந்தானம், சூரி, தர்ஷன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், டைரக்டர்கள் பாண்டியராஜன், சேரன், சஞ்சீவ் உள்பட ஏராளமானவர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

இதே போல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இன்று காலை 9 மணிக்கு நடக்கும் திருமணத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையேற்று நடத்தி வைக்கிறார். பாமக தலைவர் அன்புமணி முன்னிலை வைக்கிறார். திருமண விழாவில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தொழிலதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.