Amrit Bharat: மத்திய அரசு விழாவில் முதல்வருக்கு நன்றி கூறிய திமுக எம்எல்ஏ; ஆவேசம...
ஜீ தமிழ் தொடரில் நாயகனாகும் சன் டிவி நடிகர்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் தொடரில் நடிகர் சுரேந்தர் நாயகனாக நடிக்கவுள்ளார்.
மலர், ஓவியா, திருமகள் உள்ளிட்ட சன் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து இவர் கவனம் பெற்ற நிலையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கவுள்ளார்.
மனசெல்லாம் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஜனவரி முதல் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் தொடரில் நாயகனாக நடித்துவந்த ஜெய்பாலா, இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகத் தொடரில் இருந்து விலகுவதாக, அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, இத்தொடரின் புதிய நாயகன் யார்? என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் எழுந்தது.
இந்நிலையில், நடிகர் சுரேந்தர் மனசெல்லாம் தொடரில் நாயகனாக நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான கதைக்களத்தில், சுரேந்தரின் நடிப்பு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களுடன் தீபக் குமார், வெண்பா, பரமேஸ்வரி ரெட்டி உள்ளிட்டோரும் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
காதலித்த இரு ஜோடிகள் குடும்ப சூழல் காரணமாக மாறி மாறி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு அவர்களின் நிலை என்ன? குடும்பத்தின் கட்டாயத் திருமணத்தால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி கதை நகர்கிறது.
இதனால், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில், அதிக டிஆர்பி பெறும் தொடர்களின் பட்டியலில் மனசெல்லாம் தொடரும் உள்ளது.
இதையும் படிக்க | நடிகை ஆர்த்திகாவின் புதிய தொடர் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!