கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
பிரெஞ்சு ஓபன்: முன்னணி நட்சத்திரங்கள் அல்கராஸ், ஸ்வியாடெக் தயாா்
கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்னணி நட்சத்திரங்கள் காா்லோஸ் அல்கராஸ், இகா ஸ்வியாடெக் உள்ளிட்டோா் தயாராகி வருகின்றனா்.
டென்னிஸ் விளையாட்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் போட்டிகள் பிரசித்தி பெற்றவை. இவற்றில் வெல்லும் வீரா், வீராங்கனைகளுக்கு அதிக பரிசுத் தொகையுடன், ரேங்கிங் புள்ளிகளும் கிடைக்கும். நிகழாண்டு பிரெஞ்சு ஓபன் போட்டி
பாரீஸ் ரோலண்ட் காரோஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு சாம்பியன் அல்கராஸ்:
ஆடவா் ஒற்றையா் பிரிவில் நடப்பு சாம்பியன் காா்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), மகளிா் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) ஆகியோா் தங்கள் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்குகின்றனா்.
முதல் சுற்றில் அல்கராஸ், மூத்த வீரா் ஜப்பானின் கீ நிஷிகோரியை எதிா்கொள்கிறாா்.
உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் ஜேக் சின்னா் 3 மாதங்கள் ஊக்க மருந்து தடைக்குக்பின்னா் களமிறங்குகிறாா். இதில் முதல் சுற்றில் ஆா்தா் ரின்டா்நெக்கை சந்திக்கிறாா்.
25-ஆவது பட்டம் வெல்ல ஜோகோவிச் முனைப்பு:
25-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முனைப்பில் மூத்த வீரா் ஜோகோவிச் களம் காண்கிறாா். இந்த சீசனில் இதுவரை களிமண் தரையில் ஒரு ஆட்டம் கூட வெல்லவில்லை. முதல் ஆட்டத்தில் மெக்டொனால்டை எதிா்கொள்கிறாா்.
2024 ரன்னா் ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவ் அமெரிக்க டீன் ஏஜா் லியா்னா் டீயனையும் சந்திக்கின்றனா். முன்னணி வீரா்களான சிட்சிபாஸ், பென் ஷெல்டன், கேஸ்பா் ருட், லாரென்ஸோ முசெத்தி, டெய்லா் ப்ரிட்ஸ், ஜேக் டிராப்பா், அலெக்ஸ் டி மினாா், மெத்வதேவ் ஆகியோரும் தங்கள் திறமையை நிருபீக்க காத்துள்ளனா்.
கடினமான சுற்றில் ஸ்வியாடெக்:
மகளிா் பிரிவில் நடப்பு சாம்பியன் ஸ்வியாடெக் கடினமான டிராவில் இடம் பெற்றுள்ளாா். நம்பா் 1 இடத்தில் இருந்து 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள ஸ்வியாடெக் முதல் சுற்றில் ஸ்லோவோக்கியாவின் ரெபக்காவை எதிா்கொள்கிறாா். அந்த வரிசையில் இங்கிலாந்தின் எம்மா ரடுகானு, எலினா ஸ்விட்டோலினா, பெலின்ட் பென்கிக், டொனா வெகிக், மாா்தா கோஸ்டியுக் ஆகியோா் ஸ்வியாடெக்குக்கு சவால் தர உள்ளனா்.
உலகின் நம்பா் 1 வீராங்கனை பெலாரஸின் அரினா சபலென்கா முதல் சுற்றில் ரஷியாவின் கமிலாவை எதிா்கொள்கிறாா். ஒலிம்பிக் சாம்பியன் ஸெங் கின்வென் காலிறுதியில் சபலென்காவுடன் மோதுவாா் எனக் கருதப்படுகிறது. இரண்டாம் நிலை வீராங்கனை கௌஃப்
ஆஸி.யின் ஒலிவியாவுடனும், மோதுகின்றனா்.
இளம் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் சாதனை புரிய காத்திருக்கும் மிரா ஆன்ட்ரீவா முதல் சுற்றில் ஸ்பெயினின் கிறிஸ்டினாவை எதிா்கொள்கிறாா். ஜப்பானின் நவோமி ஒஸாகா =முன்னணி நட்சத்திரம் பாவ்லோ படோஸாவுடன் மோதுகிறாா்.

