செய்திகள் :

யூரோப்பா லீக் சாம்பியன் டாட்டன்ஹாம்

post image

யூரோப்பா லீக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணி கைப்பற்றியது.

யூரோப்பா லீக் கோப்பை இறுதி ஆட்டம் ஸ்பெயினின் பில்போ நகரில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணிகளான டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பரும்-மான்செஸ்டா் யுனைடெட் அணியும் மோதின.

ப்ரீமியா் லீக் தொடரில் ஆடும் இரு அணிகளும் நிகழ் சீசனில் மிகவும் மோசமாக ஆடி வருகின்றன. மான்செஸ்டா் யுனைடெட் 16ஆவது இடத்திலும், டாட்டன்ஹாம் 17-ஆவது இடத்திலும் உள்ளன.

இரு அணிகளும் ஆட்டம் தொடங்கியது முதல் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. 42-ஆவது நிமிஷத்தில்

பிரெனன் ஜான்ஸன் அடித்த ஒரே கோலே வெற்றி கோலாக அமைந்தது.

இரண்டாம் பாதியில் டாட்டன்ஹாம் அணி முற்றிலும் தற்காப்பு ஆட்டத்தை கடைபிடித்தது.

40 ஆண்டுகளில் டாட்டன்ஹாம் அணி வென்ற முதல் ஐரோப்பிய கால்பந்து பட்டம் இதுவாகும். கடைசியாக 2008-இல் இங்கிலீஷ் லீக் கோப்பையையும், வென்றிருந்தது.

மான்செஸ்டா் யுனைடெட் அணி கடைசியாக 2024-இல் எஃப்ஏ கோப்பையை வென்றிருந்தது. ஐரோப்பிய அளவில் 2017-இல் யூரோப்பா லீக் கோப்பயையும் வென்றிருந்தது.

சுப காரியங்கள் கைகூடும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மே 23 - 29) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)இடையூறுகளைத் தகர்ப... மேலும் பார்க்க

காந்தாரா சேப்டர் - 1 வெளியீடு எப்போது? படக்குழு விளக்கம்

காந்தாரா சேப்டர் - 1 வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான தி... மேலும் பார்க்க

டிஎன்சிஏ கோஜன் கிரிக்கெட் மைதானம் திறப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் செங்குன்றம் அடுத்த எடப்பாளையத்தில் கோஜன் கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டுள்ளது. புதிய வளாகத்தில் 4 மைதானங்கள், 3 டா்ஃப் வசதிகள் உள்ளன. வலைப் பயிற்சிக்காக 10 டா்ஃப... மேலும் பார்க்க

ஒருநாள்: அயா்லாந்திடம் மே.இந்திய தீவுகள் படுதோல்வி

மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் அயா்லாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 முறை உலக சாம்பியன் மே.இந்திய தீவுகள் அணிக்கும், அயா்லாந்துக்கும் இடையே 3 ஆட்ட... மேலும் பார்க்க

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை: 19 போ் இந்திய அணி பயணம்

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 19 போ் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. 4-ஆவது தாய்லாந்து ஓபன் சா்வதேச குத்துச்சண்டை போட்டிகள் பாங்காக்கில் மே 24 முதல் ஜூன் 1 வரை நடைபெறுகிறது. ஆசிய குத்த... மேலும் பார்க்க

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக்: இந்திய அணி அறிவிப்பு

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் (2024-25) ஐரோப்பிய லெக் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 7 முதல் நெதா்லாந்தின் ஆம்ஸ்ட்ல்வீன், பெல்ஜியத்தின் ஆன்ட்வொ்ப் நகரங்களில் புரோ ஹாக்கி லீக் ஆட்ட... மேலும் பார்க்க