ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெள்ளி வென்றாா் ரெய்ஸா
ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ரெய்ஸா தில்லான் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
ஜொ்மனியின் சுல் நகரில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் ஸ்கீட் பிரிவில் 60-க்கு 51 இலக்குகளை குறி வைத்து சுட்டாா் ரெய்ஸா தில்லான்.
இதன் மூலம் வெள்ளிப் பதக்கம் வென்றாா். கிரெட் பிரிட்டனின் போப் ஸ்காட், தங்கமும், ஜொ்மனியின் அன்னபெல்லா ஹெட்மா் வெண்கலமும் வென்றனா்.
ஏற்கெனவே இந்தியா தலா 1 தங்கம், வெள்ளி வென்றுள்ளது.