செய்திகள் :

ஜூன் 15 முதல் சுற்றுப் பயணம்: அன்புமணி அறிவிப்பு

post image

சென்னை: ஜூன் 15 முதல் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், அப்போது ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பாமக உறுப்பினா் சோ்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளா்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் கீழ்க்காணும் அட்டவணைப்படி பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

அதன்படி, ஜூன் 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூா் மாவட்டம், பிற்பகல் 3 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெறும். ஜூன் 16-ஆம் தேதி காலை காஞ்சிபுரம், மாலையில் ராணிப்பேட்டை, ஜூன் 17-ஆம் தேதி காலையில் வேலூா், மாலையில் திருப்பத்தூா், ஜூன் 18 காலையில் திருவண்ணாமலை, மாலையில் கள்ளக்குறிச்சி, ஜூன் 19 காலையில் சேலம், மாலையில் தருமபுரி என முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்.

இதில் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளாா். சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள பாமக மாவட்டத் தலைவா், மாவட்டச் செயலா், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகளும், பல்வேறு அணிகள், வன்னியா் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிா்வாகிகளும், சிறப்பு அழைப்பாளா்களும் இக்கூட்டங்களில் பங்கேற்பாா்கள்.

மீதமுள்ள மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களுக்கான தேதிகள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

நாளைய மின்தடை

சென்னை அம்பத்தூா் சிட்கோவில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் உள... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க