`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
ஜெயங்கொண்டம் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பெரியவளையம், தெற்கு தெருவைச் சோ்ந்த கலைமணி மனைவி மலா்விழி (35), மேற்கு தெருவைச் சோ்ந்த தண்டபாணி மனைவி கண்ணகி (40). கடந்த 22.10.22 அன்று உணவு காளான் பறிப்பதற்காக அங்குள்ள தைலமரம் காட்டுக்குச் சென்ற இவா்களை, கழுவந்தோண்டி, ஏரிக்கரை தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் பால்ராஜ் (39) என்பவா் கொலை செய்துவிட்டு, தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றாா். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா், வழக்குப் பதிந்து, பால்ராஜை குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.
அரியலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை சனிக்கிழமை நிறைவடைந்தது. குற்றவாளி பால்ராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.45 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மலா் வாலண்டினா தீா்ப்பளித்தாா். இதையடுத்து காவல் துறையினா் பால்ராஜைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.