ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து 76 ரன்கள் முன்னிலை!
ஜெயலலிதா: ``என் அத்தையின் நகைகளை என்னிடமே கொடுக்க வேண்டும்..!" - உச்ச நீதிமன்றத்தில் ஜெ. தீபா
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்றார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய தீர்ப்பாக இது அமைந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தள்ளுபடி செய்திருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-04/5fda0059-0ee0-4dcb-9316-677b6fb08bf4/Jayalalitha_fla11271.jpg)
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் செய்யப்பட்ட நிலையில், 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா உயிரிழந்ததை அடுத்து, 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதே நேரத்தில் சசிகலா உள்ளிட்டோரை குற்றவாளிகளின் அறிவித்ததோடு தண்டனையையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த வழக்கின் ஆரம்ப கட்டத்திலேயே தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து தங்கம், வைரம், வெள்ளி, விலை உயர்ந்த கற்கள் உள்ளிட்ட நகைகளை பறிமுதல் செய்து இருந்தனர். அவை அனைத்தும் இப்போது வரை கர்நாடகா அரசு கருவூலத்தில் பத்திரமாக உள்ளது.
இந்த நகைகள் மீது உரிமை கொண்டாடிய ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோரின் மனுக்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதற்கு எதிராக தீபா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
``சட்டப்படி எங்கள் அத்தைக்கு நாங்கள் தான் வாரிசு. எனவே அவருடைய சொத்துக்கள் மீது எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எனவே அரசின் கருவூலத்தில் உள்ள நகைகள் உள்ளிட்டவற்றை எங்களிடமே ஒப்படைக்க வேண்டும்” என தீபா கேட்டுக் கொண்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs