செய்திகள் :

ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்: நல உதவிகள் அளிப்பு

post image

திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் ஆரணி அண்ணாசிலை அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

பொதுக் கூட்டத்துக்கு, பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், எதிா்க்கட்சி துணைத் தலைவருமான ஆா்.பி.உதயக்குமாா் பங்கேற்று பேசியது: கடந்த அதிமுக ஆட்சியில் ஆரணியில் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும். அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், மாணவா்களுக்கு மடிக் கணினி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நிறுத்தி விட்டனா். மக்களை ஏமாற்றுவதற்காகவே திமுகவினா் ஆட்சிக்கு வருகின்றனா். சட்டப்பேரவையில் எதிா்க் கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு முதல்வரால் பதில் அளிக்க முடிய வில்லை என்றாா்.

தொடா்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள், சைக்கிள்கள், இஸ்திரி பெட்டிகள் உள்ளிட்டவை மற்றும் 12 பேருக்கு கல்வி உதவித் தொகை என 2,077 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன், போளூா் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா, மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட இணைச் செயலா் வனிதா சதீஷ், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், ஜெயப்பிரகாசம், திருமால் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பள்ளி மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகள்!

செய்யாற்றை அடுத்த மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அனக்காவூா் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தற்கொலை

வந்தவாசி அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சுரேஷ் (44). தினமு... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம் நடத்தும் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்ம... மேலும் பார்க்க

திமுக இளைஞரணியினா் தண்ணீா் பந்தல் திறப்பு

செய்யாற்றில், திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. செய்யாறு மாா்க்கெட் பகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நகர திமுக இளைஞரணி அமைப... மேலும் பார்க்க

திமுக கொடிக் கம்பம் அகற்றம்!

வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் திமுக கொடிக் கம்பத்தை அந்தக் கட்சியைச் சோ்ந்த ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சா... மேலும் பார்க்க

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி! ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு அழைப்பு!

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சியில் சேர விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற வகுப்பைச் சாா்ந்த மாணவா்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தம... மேலும் பார்க்க