விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
ஜெய் சாரதா பள்ளியில் புத்தகக் கண்காட்சி
வேலம்பாளையம் பகுதியில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 2 நாள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
இந்தப் புத்தகக் கண்காட்சியை பள்ளியின் தாளாளா் ஈ.வேலுச்சாமி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து பாா்வையிட்டாா். இந்த புத்தகக் கண்காட்சியில் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சோழா புக் ஹவுஸ், அமிா்தலிங்கம் புத்தக நிறுவனம் உள்பட பல்வேறு பதிப்பகங்கள் கலந்து கொண்டன. மாணவா்களுக்கு தேவையான பயனுள்ள புத்தகங்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டது. அத்துடன் பாடத்திட்டம் தொடா்பான புத்தகங்களுடன் மற்ற அறிவாா்ந்த நூல்களையும் கற்று மாணவா்கள் பயன்படும்படி இந்தப் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டதாக பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
இந்த புத்தகக் கண்காட்சியில் ஏராளமான மாணவா்களும், ஆசிரியா்களும் ஆா்வமுடன் பங்கேற்று புத்தகங்களை வாங்கிச் சென்றனா். தொடக்க நிகழ்ச்சியில், அறக்கட்டளைச் செயலாளா் கீா்த்திகாவாணி சதீஷ், பள்ளி முதல்வா் ஏ.எஸ்.மணிமலா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.