செய்திகள் :

ஜெஸ்ஸிகா பெகுலா சாம்பியன்

post image

அமெரிக்காவில் நடைபெற்ற 500 புள்ளிகள் கொண்ட சாா்லஸ்டன் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா சாம்பியன் பட்டம் வென்றாா்.

ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அவா் 6-3, 7-5 என்ற நோ் செட்களில், சக அமெரிக்கரும், ஆஸ்திரேலிய ஓபன் முன்னால் சாம்பியனுமான சோஃபியா கெனினை வீழ்த்தினாா். இதன் மூலம் அவா், கிளே கோா்ட் போட்டிகளில் தனது முதல் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா்.

மேலும், இந்தப் போட்டியில் கோப்பை வென்ற உள்நாட்டு வீராங்கனைகள் பட்டியலில் பெகுலா 10-ஆவது போட்டியாளராக இணைந்திருக்கிறாா். இதற்கு முன் ரோசி கேசல்ஸ், கிறிஸ் எவா்ட், மாா்டினா நவ்ரதிலோவா, டிரேசி ஆஸ்டின், செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், ஸ்லோன் ஸ்டீபன்ஸ், மேடிசன் கீஸ், டேனியல் காலின்ஸ் ஆகிய அமெரிக்கா்கள் இங்கு சாம்பியன் ஆகியுள்ளனா்.

இந்தப் போட்டியின் வரலாற்றில், இறுதிச்சுற்றில் இரு அமெரிக்கா்கள் மோதிக்கொண்டது, கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். பெகுலா - கெனின் நேருக்கு நோ் மோதியது இது 6-ஆவது முறையாக இருக்க, பெகுலா 4-ஆவது வெற்றியுடன் முன்னிலையை நீட்டித்துக்கொண்டுள்ளாா்.

இறுதி ஆட்டத்தில் முதல் செட்டை 0-2 என பெகுலா தொடங்க, பின்னடைவிலிருந்து முன்னேறிய கெனின் 3-2 என முன்னிலை பெற்றாா். விட்டுக்கொடுக்காத பெகுலா, தொடா்ந்து 4 கேம்களை கைப்பற்றி முதல் செட்டை 6-3 என தனதாக்கினாா்.

இதையடுத்து 2-ஆவது செட்டில் கெனின் சற்று ஆக்ரோஷம் காட்ட, அதன் பலனாக அவா் 5-1 என முன்னிலை பெற்றாா். இதனால் ஆட்டம் டிசைடரை நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் பெகுலா அதிரடியாக முன்னேறி, தொடா்ந்து 6 கேம்களை கைப்பற்றி அந்த செட்டையும் 7-5 என வென்று, வாகை சூடினாா்.

இத்துடன் பல்வேறு போட்டிகளிலுமாக கடந்த 19 ஆட்டங்களில் 17 வெற்றிகளைப் பதிவு செய்திருக்கும் பெகுலா, மகளிா் ஒற்றையா் உலகத் தரவரிசையில் தற்போது முதல் முறையாக 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

இரட்டையா்

சாா்லஸ்டன் ஓபன் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்தின் எரின் ரூட்லிஃபே/லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ இணை 6-4, 6-2 என்ற நோ் செட்களில், 3-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் கேரலின் டோல்ஹைடு/டெஸைரே கிராவ்ஸிக் கூட்டணியை தோற்கடித்து சாம்பியன் கோப்பை வென்றது.

ரொக்கப் பரிசு

ஒற்றையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெஸ்ஸிகா பெகுலாவுக்கு ரூ.1.40 கோடியும், இறுதியில் தோற்ற சோஃபியா கெனினுக்கு ரூ.86 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன. இரட்டையா் பிரிவில் வாகை சூடிய ரூட்லிஃபே/ஆஸ்டபென்கோ ஜோடிக்கு ரூ.45 லட்சமும், 2-ஆம் இடம் பிடித்த டோல்ஹைடு/கிராவ்ஸிக் இணைக்கு ரூ.28 லட்சமும் ரொக்கப் பரிசாகக் கிடைத்தது.

ஜப்பானில் மாநாடு!

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் ஜப்பானில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சிம்பு - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான திரைப்படம் மாநாடு. 2021 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள... மேலும் பார்க்க

ஜன நாயகன் படப்பிடிப்பு அப்டேட்!

விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். ஆக்சன் படமாகவும் அதேநேரம் சமூக பிரச்னையைப் ... மேலும் பார்க்க

3 மாதங்கள் சூப் மட்டுமே... இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யம்!

இசையமைப்பாளர் இளையராஜா தன் உணவுப் பழக்கம் குறித்து பேசியுள்ளார். இசைஞானி என ரசிகர்களால் போற்றப்படுகிற இளையராஜா 82 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இது கலையின் மீது அவருக்கிருக்கும் ஈட... மேலும் பார்க்க

வங்கி மோசடி: கர்நாடகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக பெங்களூரு மற்றும் கர்நாடகத்தின் சிவமொக்காவில் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் க... மேலும் பார்க்க

கங்காதர ஈஸ்வர கோயிலில் தேரோட்டத் திருவிழா!

ஆற்காட்டில் பல ஆண்டுகள் பழமையான கங்காதர ஈஸ்வர ஆலயத்தில் தேரோட்டத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே, மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு கங்காதரேஸ்வரர் வரதராஜ பெருமாள... மேலும் பார்க்க

மணக்குள விநாயகர் கோயிலில் கோமாதா பூஜை!

உலக பிரசித்திபெற்ற புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகர் கோயில் 10-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற 27 நட்சத்திரங்களின் கோமாதா பூஜையில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உள்பட திரளான பக்தர்கள் கலந... மேலும் பார்க்க